அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

இந்தியாவில் இயேசுவின் அப்போஸ்தலர்

இந்தியாவில் இயேசுவின்
       🍎       அப்போஸ்தலர்  
           ---------------------------
🍊இந்தியாவிற்கு இருக்கும் பல்வேறு சிறப்புகளில் இதுவும் ஓன்று இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவராகிய அப்போஸ்தலனாகிய தோமா இந்தியாவிற்க்கு வந்து ஊழியம் செயதார் .இங்கேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் .

🍊எனவே கிறிஸ்தவ மதம் ஆங்கிலேய ஆட்சியின் போதல்ல முதலாம் நூற்றாண்டிலேயே

🍊கிறிஸ்துவோடிருந்த சீஷராலேயே அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் .

🍊இந்தியாவில் தோமா( St . Thomos) அவர்கள் ஊழியம் செய்த நாட்களில் அவர் மூலம் தேவன் நிகழ்த்திய அற்புதங்களால்

🍊இந்து மதத்தில் உயர்குலமாக எண்ணப்படுகிற மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் .

🍊இதற்கு பின்னணியாக இருந்த அற்புதங்களில் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்

🍊கேரளாவில் பாலையூர் என்னுமிடத்தில் இந்துக்களுக்காக பிரத்யேகமான இடத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது .

🍊அதிலே ஸ்நானம் பண்ணுவதற்கு நம்பூதிரி பிராமணர்களில் சிலர் வந்தனர்.

🍊அவர்களிடத்தில் தோமா கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார் .அங்கே பெரிய வாக்குவாதம் ஏற்ப்பட்டது .

🍊அப்பொழுது தோமா அவர்களிடம் நீங்கள் தண்ணீரை அள்ளி அள்ளி வீசி பூஜிக்கிறீர்களே அப்படி நீங்கள் அள்ளி வீசுகிற தண்ணீர் ஆகாயத்தில் அப்படியே நிற்க வேண்டும் .கிழே விழக் கூடாது.

🍊அப்படி நடந்தால் நீங்கள் கடவுள் என்று சொல்பவரை நான் ஏற்றுக்கொள்கிறேன் .

🍊அப்படி உங்களால் முடியாதென்றால் அதை நான் செய்கிறேன். அப்பொழுது நான் சொல்லும் இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னார் .

🍒சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

🍊நம்பூதிரி பிராமணர்கள் தண்ணீரில் இறங்கினார்கள் வேத சாஸ்திரங்களை சொல்லி வாரி இறைத்தார்கள்

🍊ஆனால் எத்தனை முறை முயன்றும் வாரி இறைந்த நீர் மேலே போன வேகத்தில் கிழே இறங்கியது .சோர்ந்து போய் கிழே இறங்கினார்கள் .

🍊இப்பொழுது தோமாவின் வேளை ,தண்ணீரில் இறங்கினார்.

 🍊கர்த்தாவே நீரே தேவன் என்பதை இந்திய மக்கள் விசுவாசிக்கும் படி இப்பொழுது இந்த அற்புதத்தை செய்தருளும் என வேண்டி தண்ணீரை அள்ளி மேலே வீசினார் .

🍀என்ன ஆச்சரியம் !!

🍊வீசப்பட்ட தண்ணீர் வெட்டவெளியில் காகித திரைபோல் நின்றது .

🍊மக்கள் பார்த்து அதிசயித்தனர்.பிறகு அந்த காகிததிரை நீர் துளிகளாக மாறி மலர்களாக உருவெடுத்து தண்ணீரில் விழுந்தன .

🍊மட்டும்மல்ல தோமா கைவைத்து தண்ணீர் எடுத்த இடம் குழியாக விழுந்தது. அலை அடித்த பொழுதும் அந்த தடயம் மாறவே இல்லை .

🍊இதை கண்ட ஏழு நம்பூதிரி  குடும்பத்தினரும் அதே குளத்தில் தோமா வினிடத்தில் ஞானஸ்தானம் பெற்று இயேசுவின் சீஷரானார்கள் .

🍊அதன் பிறகு அந்த குளம் வெட்டாந்தரையானது .மக்கள் அதை சாபக்காடு என்றனர் .அது நாளடைவில் மருவி சவக்காடுஎன்று இப்பொழுது அழைக்கப்படுகிறது .

🌞இது உண்மை சரித்திரம்

No comments:

Post a Comment