இயேசு என்னும் துன்புறும் ஊழியர்
முன்பொரு காலத்தில் மலையமான் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் எப்படி வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். இதனைத் தன்னோடு இருக்கக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அரண்மனைச் சேவகர்களிடம் கேட்டால் அவர்கள் தன்னை சந்தோசப்படுத்தப் பொய் சொல்வார்கள் என்பதற்காக அவன் சாதாரண குடிமக்களிடம் சென்று கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் ஒரு சாதாரண விவசாயியைப் போன்று உடை தரித்து நாட்டுப் புறங்களுக்குச் சென்றான்.
ஏறக்குறைய ஒருவார காலம் கால்நடையாக நடந்த பின் ஒரு சிற்றூருக்குள் நுழைந்தான். அங்கே அவன் தன்னுடைய கண்முன்னே தென்பட்ட ஒரு குடிசையின் முன்பாக இருந்த திண்ணையில் போய் அமர்ந்தான். அமர்ந்தவன் களைப்பு மிகுதியால் அப்படியே தூங்கிவிட்டான். அவன் விழித்துப் பார்த்தபோது அவனுக்கு முன்பாக ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் அவனிடத்தில், “நீங்கள் யார்?, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் கேட்டாள். அதற்கு அவன், தான் ஒரு விவசாயி எனவும், பக்கத்து ஊரிலிருந்து மாட்டை விலைக்கு வாங்க வந்ததாகும் சொன்னான்.
பின்னர் அந்த மூதாட்டி அவன் களைப்பாய் இருப்பதைப் பார்த்துவிட்டு தன்வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகும்படியாக கேட்டுக்கொண்டாள். அதற்கு அவனும் சரி என ஒத்துக்கொண்டான்.
மூதாட்டி அவனுக்கு இலையில் சோறுபோட்டு, சாம்பார் ஊற்றி சாப்பாடு கொடுத்தாள். அவனுக்குப் பசி அதிகமாக இருந்ததால் வேகவேகமாகச் சாப்பிடத் தொடங்கினான். அதோடு மட்டுமல்லாமல் அவன் சாப்பிடும்போது சாப்பாட்டின் மையப்பகுதியிலிருந்து உணவை எடுத்து உண்ணத் தொடங்கினான். இடையிடையே நாட்டு மன்னன் எப்படி, அவன் மக்களை எப்படி ஆட்சி செலுத்துகிறான் என்று கேட்டான். அதற்கு அவள், “இந்த நாட்டு மன்னன் நல்லவன்தான். ஆனால், நீங்கள் சாப்பிடும்போது எப்படி சாப்பாட்டின் ஓரத்திலிருந்து தொடங்காமல், மையப்பகுதியிலிருந்து தொடங்குகிறீர்களோ அதுபோன்று அவன் நாட்டின் தலைநகர் நன்றாக இருக்கட்டும், செழிப்பாக இருக்கவேண்டும் என்று கவனம் செலுத்துகிறானே ஒழிய, நாட்டின் விளிம்புப் பகுதியில் இருக்கும் நாட்டுப் புறங்களைக் கண்டுகொள்வதே இல்லை” என்றாள்.
இதைக் கேட்ட அரசன் அறிவு தெளிவுற்றான். அன்றைக்கே அவன் அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய அரண்மனைக்கு வந்து, தலைநகர் மட்டுமல்ல நாட்டுப் புறங்கள்மீதும் கவனம் செலுத்தி அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றான்.
தன்னைக் குறித்து சுயஆய்வு செய்யாத எவரும் வளர்வதற்கு வழியில்லை என்ற என்ற முன்னோர்களின் கூற்றுக்கு இணங்க மலையமான் என்ற அரசன் தன்னைக் குறித்து, தனது ஆட்சியைக் குறித்து ஆய்வு மேற்கொண்டான். அதன்வழியாக தன்னுடைய நாட்டை மக்களை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றான். பொதுக்காலத்தின் இருப்பத்தியோராம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசங்கள் ‘இயேசு என்னும் துன்புறும் ஊழியர்’ என்ற சிந்தனையை வழங்குகின்றது. நாம் அதனைக் குறித்து சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் ஓர் ஆய்வினை மேற்கொள்கிறார். அது தன்னைக் குறித்து அறிந்துகொள்வதற்காக அல்ல, மாறாக சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குத்தான். இயேசுவின் கேள்விக்கு அவர்கள், சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா என்றும், மற்றும் சிலர் எரேமியா எனவும் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்வதாகக் கூறுகிறார்கள். உடனேதான் இயேசு அவர்களிடம், “நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கின்றார். அதற்கு சீமோன் பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கிறார்.
பேதுருவின் பதிலால் இயேசு அவரைப் புகழ்கின்றார். அதேநேரத்தில் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என எடுத்துக்கூறுகிறார். பேதுரு இயேசுவைக் குறித்து சரியாகத் தானே சொன்னார், பின் எதற்காக இயேசு அவரைப் பார்த்து இதை யாரிடமும் சொல்லகூடாது என்று சொன்னார் என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. காரணம் பேதுரு இயேசுவை ஒரு அரசியல் மெசியாவாகப் பார்த்தார். பேதுரு மட்டுமல்ல, இஸ்ரயேல் மக்கள் அனைவருமே மெசியாவை அப்படித்தான் பார்த்தார்கள். மெசியா என்றால் தன்னுடைய அதிகாரத்தால் எல்லா நாடுகளையும், இனங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எருசலேமைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செலுத்துவார் என்பதுதான் யூதர்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ தான் அதிகாரம் செலுத்துகின்ற மெசியா அல்ல, மாறாக அன்பு செலுத்தும், மக்களின் வாழ்வுக்கு தன்னுடைய வாழ்வையே அற்பணிக்கும் மெசியா எனவும், பிறரைத் துன்புறுத்துகின்ற மெசியா அல்ல, மாறாக மக்களுக்குக்காக தன்மீது துன்பங்களை சுமந்துகொள்கின்ற துன்புறும் மெசியா என்பதை தன்னுடைய வாழ்வால் எடுத்துக்கூறுகின்றார்; அதை தன்னோடு இருந்த சீடர்களுக்குப் புரியவைக்கிறார்.
இயேசு பிறரைத் துன்புறுத்துகின்ற மெசியா அல்ல, மாறாக அவர் பிறருக்காகத் தன்மேல் துன்பங்களை சுமந்துகொள்ளும் மெசியா என்பதை விவிலியத்தின் பல பகுதிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. குறிப்பாக எசாயா புத்தகம் 50:6 ல் வாசிக்கின்றோம், “அடிப்போருக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” என்று. இப்பகுதி துன்புறும் ஊழியனைக் குறித்து சொல்லப்படும் பகுதிகளுள் ஒன்று. ஆகவே, இயேசு என்னும் மெசியா மக்களுக்கு அரசியல் விடுதலையை அல்ல, ஆன்மீக விடுதலையையும், முழு மனித விடுதலையையும் தன்னுடைய பாடுகள், துன்பங்கள் வழியாக அளிக்க வந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம்.
இங்கே இறையியலாளரான மோல்ட்மான் மோர்கன் என்பவர் கூறக்கூடிய செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அவர் கூறுகிறார், “மெசியாவை – இயேசுவைக் – குறித்த நமது பார்வைக்கும் வாழ்வுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது” என்று. எப்படி என்னும்பொது அவர் கூறுவார், “நாம் மெசியாவை அதிகாரம் செலுத்துகிறவராகப் பார்க்கும்போது நாமும் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முயல்வோம். அதேநேரத்தில் அவரை ஒரு துன்புறும் ஊழியராக, மக்களின் வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணிக்கின்றவராகப் பார்க்கும்போது நாமும் பிறரது துன்பத்தில் பங்கேற்று, அவர்களுடைய வாழ்வு ஏற்றம் காணச் செய்வோம்” என்று. ஆகவே இறைவனை – மெசியாவைக் – குறித்த நமது பார்வை மேன்மைமிக்கதாக இருக்குமாறு செய்வோம்.
ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்று (யோவா 10:10). எனவே நாம் இயேசுவை பிறருக்காக, மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு துன்புறும் மெசியாவாகப் பார்க்கின்றபோது நாமும் பிறருக்காக நம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க முயல்வோம் என்பது உறுதி.
நம்முடைய இந்திய நாட்டில் அதிகமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு புராதனக் கதை இது. ஒரு அரசனுக்கு காட்டுக்குச் சென்று புலிகளை வேட்டையாடுவது என்றால் அவ்வளவு பிடிக்கும். எனவே அவன் ஒவ்வொருநாளும் காட்டுக்குச் சென்று புலிகளை வேட்டையாடி வருவான். (அரசனுக்கு வேறு வேலையே இல்லை போலும்). அவன் ஒவ்வொருநாளும் இப்படிச் செய்வதால் காட்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போனது.
இதை அறிந்த புலிக்கூட்டத்தின் தலைவன் சக புலிகளை அழைத்து இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என தீர்மானித்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு புலி, “இப்படி நாம் பயந்து பயந்து வாழ்வதற்குப் பதில் நம்முடைய பெயர்களை எல்லாம் ஒரு சீட்டில் எழுதி, அதை குலுக்கிப் போட்டு, அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்து, அந்தச் சீட்டில் யாருடைய பெயர் வருகிறதோ, அவர் அரசனுக்கு இரையாகப் போகலாம்” என்று சொன்னது. அக்கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அடுத்த நாள் தலைமைப் புலி வேட்டையாட வந்த அரசனைச் சந்தித்து, முந்தைய தினம் தங்களுடைய குழுவில் எடுத்த தீர்மானத்தைச் சொன்னது. அரசனும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டான். அதன்படி ஒவ்வொருநாளும் யார்மீது சீட்டு விழுந்ததோ அந்தப் புலி அரசனிடம் சரணடைந்து இரையாகியது. எப்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்து.
ஒருநாள் தலைமைப் புலி அரசனைச் சந்தித்து, “இன்றைக்கு நான்தான் உங்களுக்கு இரையாக வேண்டும். ஆதலால் நீங்கள் என்னை இரையாக ஏற்றுக்கொள்ளலாம்” என்றது. இதைக் கேட்ட அரசன் அதிர்ச்சிக்குள்ளானான். “என்னால் புலித்தலைவனாகிய உங்களை இரையாக எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் புலிக்கூட்டத்திற்கே தலைவன்” என்றான். அதற்கு அந்த தலைமைப் புலி சொன்னது, “ஒரு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு சீட்டு என்னுடைய பெயரில் விழவில்லை, மாறாக இன்றைக்குத் தான் நாலைந்து குட்டிகளை ஈன்ற ஒரு தாய்ப்புலியின்மீது விழுந்தது. அதனை உங்களுக்கு இரையாக அனுப்ப எனக்கு மனவிருப்பமில்லை. அதேநேரத்தில் அந்த தாய்ப்புலிக்காக இன்னொரு புலியை அனுப்பவும் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் அந்தத் தாய்ப்புலிக்கு பதிலாக என்னையே இரையாகத் தருகின்றேன்” என்றது.
இதைக் கேட்ட அரசன், தன் இனத்தில் உள்ள ஒரு சக புலிக்காக தன்னுடைய உயிரையே தரும் புலித்தலைவன் எங்கே, மற்ற உயிர்களை வதைக்கும் நான் எங்கே’ என்று தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினான். அதன்பிறகு அந்த புலிக்கூட்டத்தை தொந்தரவு செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிச் சென்று நல்ல அரசனாக வாழ்ந்து வந்தான்.
மேலே உள்ள கதையில் வரும் புலிக்கூட்டத் தலைவனைப் போன்றுதான் நம் ஆண்டவராகிய இயேசு பிறருக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தார்.
ஆகவே அவருடைய வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் பிறருக்காக நம்மையே அர்ப்பணிப்போம். துன்புறும் ஊழியனாகிய இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:
Post a Comment