அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, January 12, 2022

செசாரியா நகர பசீல்

புனித பெரிய பசீல்
கீவ்வில் உள்ள புனித சோபியா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் இருக்கும் புனித பசீலின் திருவோவியம்
ஆயர், மற்றும் மறைவல்லுநர்;
பிறப்பு329 அல்லது 330
செசாரியா, கப்படோசீயா, துருக்கி,
இறப்புஜனவரி 2, 379
செசாரியா, கப்படோசீயா
ஏற்கும் சபை/சமயம்கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறித்தவம்
திருவிழா
  • ஜனவரி 1/ ஜனவரி 30 - (கிழக்கு மரபுவழி திருச்சபை)
  • ஜனவரி 2 -கத்தோலிக்க திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்
சித்தரிக்கப்படும் வகைஆயர் உடைகளில்
பாதுகாவல்உருசியா, கப்படோசீயா, துருக்கி, மருத்துவமனை மேளாளர்கள், துறவிகள், கல்வி, பேயோட்டுதல், திருவழிபாடு

செசாரியா நகர பசீல் அல்லது புனித பெரிய பசீலியார், (கிரேக்க மொழி: Ἅγιος Βασίλειος ὁ Μέγας; 329 அல்லது 330 – ஜனவரி 1, 379) என்பவர் தற்கால துருக்கியில் இருந்த கப்படோசீயா, துருக்கி, அனத்தோலியாவின் செசாரியா நகரின் கிரேக்க கிறித்தவ ஆயராவார். இவர் தம் சமகால கிறித்தவ இறையிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். நைசின் விசுவாச அறிக்கையினை ஆதரித்து ஆரியன் மற்றும் அப்பொலொனாரிசு ஆகியோரின் திரிபுக்கொள்கையினை இவர் எதிர்த்தார். இவர் தனது அரசியல் மற்றும் இறையியல் நம்பிக்கைகளை சமநிலையில் வைக்கும் திறன்மிக்கவராய் இருந்ததால் இவர் நைசின் விசுவாச அறிக்கையின் குறிக்கத்தக்க ஆதரவாளரானார்.

இறையியல்மட்டும் அல்லாது ஏழை எளியோருக்கு உதவுவதிலும் இவர் புகழ்பெற்றார். இவர் துறவு மடங்களுக்கு அளித்த வழிகாட்டுதல்கள் துறவியரின் கூட்டு வாழ்க்கை, வழிபாட்டு மன்றாட்டு மற்றும் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆதலால் இவர் கிழக்கத்திய கிறித்தவ துறவறத்தின் முன்னோடியாகக்கருதப்படுகின்றார். கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறித்தவம் இவரைப்புனிதர் என ஏற்கின்றன. பசீல், நசியான் கிரகோரி மற்றும் நைசா கிரகோரி ஆகியோர் கூட்டாக கப்போடோசிய தந்தையர்கள் என அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் நசியான் கிரகோரி, கிறிசோஸ்தோமோடு சேர்த்து இவரையும் மூன்று புனித தலைவர்கள் (Three Holy Hierarchs) என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றது. திருச்சபையின் மறைவல்லுநர் எனக்கருதப்படுகின்றார். இவரை விண்ணக மறைஉண்மைகளை வெளிப்படுத்துபவர் எனப்பொருள்படும் "Ουρανοφαντωρ" என்னும் அடைமொழியிட்டு இவரை அழைப்பர்.

மேற்கோள்கள்

 Fedwick (1981), p. 5

 St Basil the Great the Archbishop of Caesarea, in Cappadocia. Orthodox Church in America Website.

  "St. Basil the Great". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

No comments:

Post a Comment