அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

விண்ணக அரசியே...

விண்ணக அரசியே...

விண்ணில் வீற்றிருக்கும் விண்ணரசியே

மண்ணக மாந்தர் யாம் மகிழ்வுறும் மாதரசியே

நினைத்து செபித்தால் மனங்கமழும் மங்கையர்க்கரசியே

வாழ்த்தி செபித்தால் வந்தருளும் மணிமுடியரசியே

நோய்தீரவே வாய்திறந்து செபித்தால் அருகமரும் மங்கல அரசியே

குடும்ப நடுநாயமாய்   கொலுவிருக்கும் திருக்குடும்ப அரசியே

செபமாலை கையெடுத்து அமர்கையிலே தங்கிடும் தயாள அரசியே

உம்மைக் காண கடுந்தவம் புரிந்தோரின் வழித்துணை அரசியே

எங்களுக்காக வேண்டிடும் என்போரின் ஒரே ஆறுதலரசியே

சஞ்சலமடைந்தோரின் நெஞ்சத்து குறையகற்றும் விமலராணியே

எல்லாப் புனிதர்களின் முன்மாதிரியாம் உலகோர் அரசியே

தனிப்பெரும் அழகாய் தரணியில் எமைக் காக்கும் மாசற்ற அரசியே

பேதையாய் பாதை தடுமாறுவோரும் ஓர்குலமாய் உமைத் தேட செய்யும் பேரரசியே !

அன்புடன்
கஸ்மீர் ரோச்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment