அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 25, 2018

தூய கார்மேல் அன்னை



Our lady of Mount Carmel

"தூய கார்மேல் அன்னை"அல்லது"தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனிதஉத்தரியமாதா" என்பது கார்மேல் சபையின்பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயராகும். 

Our lady of mount carmelகார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை புனித பூமியில் உள்ள கார்மேல் மலையில் வனத்துறவிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை மரியாளின் பெயரில் கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாளுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

15ம்நூற்றாண்டில், மரியாளின் உத்தரியம் என்னும் அருளிக்கத்தின் பக்தி பரவ துவங்கியது. மரியாளே உத்தரியத்தை சீமோன்ஸ்தோக் என்னும் கார்மேல்சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது.

16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழாநாள் மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகும். தூய கார்மேல் அன்னை, சிலிநாட்டின் பாதுகாவலி ஆவார். இவ்விழாவானது, கார்மேல் சபையினரின் அதிமுக்கியமான விழாவாகும். கார்மேல் சபையினர் இந்த பெயரைத் தெரிந்துகொள்ள முக்கியமான ஒரு காரணம் உண்டு. கார்மேல் மலையிலே புனித கன்னி மரியாளுக்குத் தோத்திரமாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கபட்டது. அன்னை பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்னரே அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.

எபிரேய மொழியில் "கார்மேல்" என்ற சொல்லுக்கு "தோட்டம்" என்பது பொருள். பாலஸ்தீன நாட்டில் ஹைபா வளைகுடாவில்,1800 அடி உயரத்திலிருக்கும் 
தோட்டத்தில் தான் பழைய ஆகமத்தில் இறைவாக்கினர் எலியா தங்கி தன் செபத்தில் நாட்களை கழித்தார். 12ம் நூற்றாண்டில் வனத்துறவியர் சிலர் இதே ஜூலை 16,1251ல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் தேவதாய் காட்சி கொடுத்தாள் என்பது ஐதீகம். இவருக்கு, அன்னை மரியாள் உத்தரியம் அணிந்து கொண்டு வந்து காட்சி கொடுத்து, உத்தரிய பக்தியை இவ்வுலகில் பரப்பும் படியாக கேட்டுக்கொண்டதன் பேரில், இன்றும் அப்பக்தி பரப்பப்பட்டு பலன் அடையப்படுகின்றது. நம் பரலோக அன்னை உத்தரியத்தைக் கண்பித்தாள்.

அந்த உத்தரியத்தைத் தரித்திருக்கும் அனைவருக்கும் பரலோக கொடைகளையும் தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். வெறுமனே உத்தரியத்தைத் தரித்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு குரு, உத்தரியத்தை அவர்களுக்கு அளிக்கவேண்டும்.

செபம் :

அன்பே உருவான தெய்வமே! மாட்சி மிகுந்த எம் கார்மேல் அன்னையின் வேண்டுதலால், எங்களுக்கு எந்நாளும் உதவியாய் வாரும். புனித கார்மேல் சபையிலுள்ள ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதியும். அவர்களோடிணைந்து, நாங்களும் என்றென்றும், கடவுளின் மலைக்கு வந்து சேரும் வரமருளும். ஆமென் †

No comments:

Post a Comment