பிஞ்சு விரல்கள் அசைந்தாட எம்மை தேடும் குழந்தை இயேசு ராஜனே
எம் வஞ்சக நஞ்சை முற்றிலும் கழுவிட அருகில் வாருமே
குற்றமில்லா உள்ளமும், சுற்றம் சூழ் நட்பும் எம்மில் மழையென பொழியுமே
நினைவும் செயலும் உமக்கேற்ற வண்ணம் மாறவே
நல்வழி சொல்லுமே
சின்னஞ்சிறு வண்ணப்பூக்களாம் உம் சிறாரை உம் அருகமர்த்தி ஆசீர் அளித்திடுமே
குழந்தை வரம் நாடும் தம்பதியருக்கு உம்மைப் போன்ற அதிசயத்தை காணச் செய்திடுமே
உம்மை நேசிக்க நேசிக்க நீர் அளிக்கும் கொடைகளால் எமை மூழ்கடித்திடுமே
ஆதரவாம் உம் திருவதனம் நாளும் எமை நோக்கிடவே எம் வழியை சீராக்கிடுமே
நல்லவை நிலைக்கவும், நிலையற்றவை எம்மை அகலவும் கண்ணொளி தந்திடுமே
சுழலும் உலகே உம் கைகளில் அடங்க எம் உழலும் வாழ்வையும் நிலை நிறுத்திடுமே
போற்றி போற்ற
மழலை மன்னவரே போற்றி
போற்றி போற்றி
அருட்கடலே
போற்றி
போற்றி போற்றி
பூந்தளிரே போற்றி
போற்றி போற்றி
பொன்மலரே போற்றி
போற்றி போற்றி
ஞான ஒளியே போற்றி
அன்புடன்
கஸ்மீர் ரோச்

No comments:
Post a Comment