அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 25, 2018

விண்ணேற்பு அன்னை காட்சி

எருசலேம் காட்சி
இறைமகன் இயேசுவின் அன்னை மரியா இறக்கும் தருணத்தில், பல்வேறு இடங்களுக்கு உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க சென்றிருந்த திருத்தூதர்கள் இறை ஏவுதலால் எருசலேம் நோக்கி விரைந்தனர். வெகுதூரம் சென்றிருந்த தோமாவைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் அன்னை மரியா மரணம் அடைந்தார். இறந்து அடக்கம் செய்யப்பட்டதும், கடவுள் மரியாவின் ஆன்மாவோடு அவரது உடலையும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். மரியாவின் மரண வேளையில் அவரது ஆசீரைப் பெற முடியாத திருத்தூதர் தோமா, மரியன்னையைக் காண வேண்டும் என்று ஆவலோடு விண்ணகத்தை நோக்கி செபம் செய்துகொண்டு இருந்தார். கி.பி. 46 ஆகஸ்ட் 22ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment