அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, January 12, 2022

திருத்தந்தை முதலாம் கிரகோரி

திருத்தந்தை முதலாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius I) 


திருத்தந்தை புனித முதலாம் கிரகோரி

ஆட்சி                                                                3 செப்டம்பர் 590 -   12 மார்ச் 604

முன்னிருந்தவர்

இரண்டாம் பெலாஜியுஸ்

பின்வந்தவர்

சபீனியன்

ஆயர்நிலை திருப்பொழிவு

3 செப்டம்பர் 590

இயற்பெயர்

கிரகோரியுஸ்

பிறப்பு

c. 540
உரோமை நகரம்

இறப்பு

12 மார்ச்சு 604 (aged 64)
உரோமை நகரம்பைசாந்தியப் பேரரசு

கல்லறை

புனித பேதுரு பேராலயம் (1606)

இல்லம்

உரோமை நகரம்

பெற்றோர்

கோர்தியானுஸ், சில்வியா

திருவிழா

3 செப்டம்பர், 12 மார்ச்

(சுமார். 540 – 12 மார்ச் 604), அல்லது பெரியா கிரகோரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 590 முதல் தன் இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் தனது எழுத்துகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார்

இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் கிறித்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.

இவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார். சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார். இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

ஆதாரங்கள்

*  Ekonomou, 2007, p. 22.

 * Christian Life and Worship (Dissertations in European Economic History), 1948, 1979, Gerald Ellard (1894–1963), Arno Press, ISBN 0-405-10819-2 ISBN 9780405108198, p. 125. [1]

*  "Gregory I". The Oxford Dictionary of the Christian Church. (2005). Ed. F.L. Cross. New York: Oxford University Press. 

*  "Institutes of the Christian Religion Book IV". Institutes of the Christian Religion Book IV. (1515). Ed. F.L. Cross. New York: Oxford University Press. 

*  "St. Gregory the Great". Web site of Saint Charles Borromeo Catholic Church.

No comments:

Post a Comment