அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

இறைவனின் பேரிரக்கம் !

இறைவனின் பேரிரக்கம் !


மன்னிப்பு என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் நமக்கு சங்கடமாக இருக்கிறது. ஒரு சிலரை மட்டும் நம்மால் மன்னிக்கவே முடிவதில்லை, எவ்வளவு முயற்சி செய்தாலும். மன்னிக்கவே முடியாது என்று தோன்றும்போதெல்லாம், நாம் நினைவில் கொள்ளவேண்டிய உவமையை ஆண்டவர் இயேசு இன்று நமக்குத் தந்திருக்கிறார். நாம் பிறரை மன்னிப்பதற்கும், இறைவன் நம்மை மன்னிப்பதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும், மடுவுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என்பதை உணர்ந்தாலே நாம் வெட்கத்தால் தலை குனிந்துவிடுவோம்.

நமது பாவங்களை, குற்றங்களை இறைவன் நாள்தோறும் மன்னிக்கின்றார்.  எந்த நிபந்தனையும் இன்றி நம்மை ஏற்றுக்கொள்கின்றார். சில பாவங்களை மீண்டும், மீண்டும் நாம் செய்கின்றோம். ஆனால், இறைவன் ஒவ்வொரு முறையும் நம்மை மன்னிக்கின்றார், அரவணைக்கின்றார், அன்பு செய்கின்றார், தொடர்ந்து நம்மை ஆசிர்வதித்து வருகின்றார்.

இறைவனின் மன்னிக்கும் பேரன்புக்கு முன்னால் நமது மன்னிக்கும் பெருந்தன்மை ஒரு தூசி போன்றது. இதை உணர்ந்து, நமக்குத் துன்பம் தரும் எவரையும் மன்னிக்க முன் வருவோமா?

மன்றாடுவோம்; மன்னிப்பின் ஊற்றான இயேசுவே, ஒவ்வொரு நாளும் உமது மன்னிப்பின் பேரன்பை நான் அனுபவிக்கின்றேன். உமது இரக்கத்தை உணர்கின்றேன். உமக்கு நன்றி கூறுகிறேன்.. மண்ணிலிருந்து விண் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு நீர் எங்கள் பாவங்களை எங்களிடமிருந்து அகற்றி விடுகின்றீர். உமது மன்னிக்கும் பேரன்பை அனுபவிக்கும் நாங்களும் பிறரை மன்னித்து மகிழும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.



-- அருட்தந்தை குமார்ராஜா⁠⁠⁠⁠

No comments:

Post a Comment