அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, July 16, 2024

திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius I)

 திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் நவம்பர் 27, 399 முதல் திசம்பர் 19, 401 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 39ஆம் திருத்தந்தை ஆவார்.

முதலாம் அனஸ்தாசியுஸ்
39ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்நவம்பர் 27, 399
ஆட்சி முடிவுதிசம்பர் 19, 401
முன்னிருந்தவர்சிரீசியஸ்
பின்வந்தவர்முதலாம் இன்னசெண்ட்
பிற தகவல்கள்
இயற்பெயர்அனஸ்தாசியுஸ்
பிறப்புதெரியவில்லை
தெரியவில்லை
இறப்புதிசம்பர் 19, 401
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாதிசம்பர் 19

வரலாற்றுக் குறிப்புகள்

திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் சிரீசியஸ் ஆவார். அனஸ்தாசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் அனஸ்தாசியுசின் சாவுக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலாம் இன்னசெண்ட் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.

இறையியலார் ஓரிஜென் கண்டனம் செய்யப்படுதல்

திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கு ஒரு காரணம் அவர் கி.பி. 2-3 நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஓரிஜென் என்னும் தலைசிறந்த இறையியலார் கிரேக்கத்தில் எழுதிய இறையியல் நூல் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டதும் அது தப்பறையான கொள்கைகளை உள்ளடக்கியதாகக் கருதப்பட்டதால் அவரைக் கண்டனம் செய்தது ஆகும்.

தவறான கொள்கைகள் கண்டிக்கப்படல்

முதலாம் அனஸ்தாசியுஸ் காலத்தில் கிறித்தவ மதம் துன்புறுத்தப்பட்ட பின்னணியில் தம் மதத்தை மறுத்து உரோமை அரசனுக்குப் பணிந்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றினை ஏற்று மீண்டும் கிறித்தவத்துக்குத் திரும்ப விரும்பினார்கள். அவர்கள் மீண்டும் ஏற்பது குறித்தும், அவர்களுக்கு மீண்டும் திருமுழுக்கு அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் சர்ச்சை தொடர்ந்து நிகழ்ந்தது. டொனாட்டியக் கொள்கை, அவர்களுக்கு மறு-திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடியது. அவர்களை மீண்டும் சபையில் ஏற்பது குறித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஆயர்கள் சிலர் கேட்டனர். அதற்கு, திருத்தந்தை அத்தனாசியுஸ் கார்த்தேஜ் சங்கத்திற்கு (401) எழுதிய கடிதத்தில் பதில் அளித்தார்.

திருத்தந்தையின் ஆதரவாளர்கள்

முதலாம் அனஸ்தாசியுசுக்கு ஆதரவு அளித்தவர்களுள் புனித ஜெரோம், புனித நோலா பவுலீனுஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்விருவரும் அனஸ்தாசியுசுக்கு முன் திருத்தந்தையாக இருந்த சிரீசியசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க கால மேலைத் திருச்சபையின் தலைசிறந்த இறையியலராகக் கருதப்படும் புனித அகுஸ்தீன் (354-430) திருத்தந்தை அனஸ்தாசியுஸ் தப்பறைக் கொள்கைகளைக் கடிந்துகொண்டதைப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் அனஸ்தாசியுசின் நண்பராகவும் திகழ்ந்தார்.

இறப்பும் திருவிழாவும்

முதலாம் அத்தனாசியுஸ் 401, திசம்பர் 19ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் போர்த்துவேன்சிசு சாலையில் அமைந்த போன்ந்தியன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது திருவிழா திசம்பர் 19ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment