அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.


மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள்.

தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை

பெருநகர் ஒன்றில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்த தொழிலாளி ஒருவருக்கு தான் வசித்து வந்த இடத்தில் தொழில் சரியாகப் போகாததால், வேறொரு நகருக்கு இடம் பெயர்ந்து, அங்கு தன்னுடைய செருப்பு தைக்கும் தொழிலை விட்டுவிட்டு, மருத்துவம் பார்க்கும் தொழிலைச் செய்யத் தொடங்கினார். தான் கொடுக்கும் மருந்தினை உட்கொண்டால் தீராத நோயகூடத் தீரும் என்றதொரு அறிவிப்பை வேறு அவர் நகர் முழுக்கக் கொடுத்திருந்தார். இதனால் மக்கள் கூட்டம் அவர் கொடுத்துவந்த மருந்தினை வாங்குவதற்கு அலைமோதியது.

அந்த மருந்து வேறொன்னுமில்லை ஒருவிதமான போதைப் பொருளே. மக்கள் அந்த மருந்தை – போதைப் பொருளை – வாங்கி உட்கொண்ட சில மணிநேரத்திற்கு மெய்மறந்து நின்றார்கள். அதனாலேயே அது சக்தி வாய்ந்த மருந்தென்று நினைத்துக்கொண்டார்கள். மக்கள் இப்படி போட்டி போட்டுக்கொண்டு அந்த மருந்தினை வாங்கிச் சென்றதினால் அந்தத் திடீர் மருத்துவரின் வாழ்க்கை எங்கோ சென்றது.

இப்படி வசதி வாய்ப்போடும் ஆடம்பரமாகவும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்த அந்த திடீர் மருத்துவர் ஒருநாள் திடிரென்று நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதியின் மாவட்ட ஆட்சியாளர் அந்த மருத்துவரை பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். அவருக்கு மருத்துவரின் ஏமாற்று வேலைகள் நன்றாகத் தெரிந்திருந்தன. அதனால் அவருடைய போலித்தனங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, இதுதான் சரியான தருணம் என்பதை அறிந்து படுக்கையில் கிடந்த அவரிடம், “ஐயா மருத்துவரே! நீங்கள்தான் எவ்வளவு பெரிய நோயினையும் குணப்படுத்துகின்ற அளவுக்கு மருந்து (?) வைத்திருக்கிறீர்களே, அதை உட்கொண்டு நோயிலிருந்து விடுதலை பெறலாமே, எதற்காக இப்படி படுத்த படுக்கையாகவே கிடக்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர், “கலைக்டர் ஐயா! இதற்கு மேலும் என்னால் உண்மையைச் சொன்னாமல் இருக்க முடியவில்லை... அடிப்படையில் நான் செருப்பு தைக்கும் தொழிலாளி. பிழைப்பிற்காகத்தான் இந்த மருத்துவர் வேடம் போட்டேன். உண்மையில் நான் கொடுத்து வந்தது மருந்தே கிடையாது, ஒருவிதமான போதைப் பொருளே” என்றார்.

அந்த மருத்துவர் – செருப்பு தைக்கும் தொழிலாளி – சொன்ன செய்தியைக் கேட்டபோது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னர் அவர் அவருடைய மருத்துவ மனைக்கு முன்பாகத் திரண்டிருந்த மக்களிடம், “அன்பு மக்களே! இந்த மனிதர் கொடுத்து வருகின்ற மருந்தினால் அவருடைய நோயினையே குணப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கும்போது உங்களுடைய நோயினை எப்படிக் குணப்படுத்த முடியும். ஆதலால் தயதுசெய்து போலிகளைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்” என்றார்.

உண்கின்ற உணவிலிருந்து உட்கொள்ளும் மருந்து வரை – மருத்துவத்துறை வரை – எல்லாவற்றிலும் போலிகள் மலிர்ந்திருப்பது மனுக்குலத்தைப் பிடித்திருக்கின்ற மிகப்பெரிய சாபக் கேடு, ஆன்மீகத்திலும் இத்தகைய போலிகள் மலிந்திருப்பது வேதனையான ஒரு விசயம்தான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தான் வாழ்ந்து வந்த காலத்தில் ஆன்மீக வாழ்க்கையில் – சமயத்தில் - மலிந்துகிடந்த போலிகளான பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். இயேசு கடுமையாகச் சாடுகின்ற அளவுக்கு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு கூறுகின்றார், “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்கள் என்னென்ன செய்யும்பை உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்”.

ஆம், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கடவுளுடைய கட்டளையை மக்களுக்கு கடைப்பிடித்து வந்தார்கள். அதனைத் தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வந்தார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இத்தகைய போலி வாழ்க்கையைத்தான் ஆண்டவர் இயேசு கடுமையாக சாடுகின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இதோடு நின்றுவிடவில்லை, அவர்கள் சட்டம், சமயம் என்கிற பெயரில் அதிகமான சுமைகளை மக்கள்மீது சுமத்தினார்கள், அவர்களாவது அதைக் கடைபிடித்தார்களா? என்றால் அதுவும் இல்லை. இப்படி எல்லாவற்றிலும் போலித்தனமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, மக்களை அதிகமாக வாட்டியதால்தான் இயேசு அவர்களைக் கடுமையாக விமர்சிக்கின்றார்.

ஆகவே, நாம் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமான போலியான வாழ்க்கை வாழாமல், ஆண்டவர் இயேசுவைப் போன்று சொல்வதன் படி நடக்கக்கற்றுக் கொள்வோம். ஆண்டவரின் திருசிட்டத்தின் நிறைவான இறையன்பு, பிறரன்பின் படி வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:

Post a Comment