அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, January 13, 2022

சிரியனான புனித எபிரேம்

சிரியனான புனித எபிரேம்
திருத்தொண்டர், மறைப்பணியாளர், மறைவல்லுநர்
பிறப்புc. 306
நிசிபிஸ் (துருக்கி)
இறப்பு9 ஜூன் 373
மெசபோடாமியா
ஏற்கும் சபை/சமயம்எல்லா கிறித்தவ பிரிவுகளும்
திருவிழா28 சனவரி (கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்)

உயிர்ப்பு ஞாயிறுக்குப் முன்வரும் 7ஆம் சனி (சிரிய மரபுவழி திருச்சபை)
ஜூன் 9 (கத்தோலிக்க திருச்சபை)

ஜூன் 18 (மாரோனைட் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைதிராட்சைக் கொடி மற்றும் ஏட்டுச் சுருள், திருத்தொண்டர் உடையில் தூப கலசத்தோடு; புனித பெரிய பசீலோடு; யாழினால் பாட்டமைப்பது போல
பாதுகாவல்ஆன்ம வழிகாட்டிகள்

சிரியனான புனித எபிரேம் (சிரியம்: ܡܪܝ ܐܦܪܝܡ ܣܘܪܝܝܐ, கிரேக்கம்: Ἐφραίμ ὁ Σῦρος; இலத்தீன்: Ephraem Syrus; சுமார். 306 – 373) என்பவர் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிரிய திருத்தொண்டரும் சிரிய மொழியில் புலமைப்பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார்.  இவரின் படைப்புகள் கிறித்தவர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாய் இருந்தன. பல கிறித்தவப் பிரிவுகள் இவரை புனிதர் என ஏற்கின்றன. திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையில் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

எபிரேம் பாடல்கள், கவிதைகள், மறை உரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்பவேளையில் திருச்சபையை சீர்திருத உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. எனவே மக்கள் பல நூற்றாண்டுகளாக இவரது மரணத்திற்கு பின்னரும், இவரது பெயரில் பல நூல்களை (pseudepigraphal) எழுதினார். இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறித்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

மேற்கோள்கள்

 Karim, Cyril Aphrem (2004-12). Symbols of the cross in the writings of the early Syriac Fathers. Gorgias Press LLC. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59333-230-3. 

 Lipiński, Edward (2000). The Aramaeans: their ancient history, culture, religion. Peeters Publishers. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-429-0859-8. 

 Possekel, Ute (1999). Evidence of Greek philosophical concepts in the writings of Ephrem the Syrian. Peeters Publishers. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-429-0759-1. 

 Cameron, Averil; Kuhrt, Amélie (1993). Images of women in antiquity. Psychology Press. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-09095-7. 

 Parry (1999), p. 180

No comments:

Post a Comment