உத்தரிக்கும் ஆன்மாக்கள் மேல் நாம் இரக்கப்படுவோம்.....
அவர்கள் நம் ஜெபத்திற்காகத்தான் காத்திருக்கிறார்கள். நம்மால்தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். அவர்களுக்காக நாம் அடிக்கடி திருப்பலி பூசைகள் நிறைவேற்றியும், ஜெபமாலைகள் ஒப்புக்கொடுக்கவும் வேண்டும். நம் ஜெப தவ ஒறுத்தல் முயற்சிகளால் மோட்சம் சேரும் அவர்கள் நம்மை ஒரு நாளும் மறப்பதில்லை.. நமக்காக நம் இயேசு தெய்வத்திடம் மன்றாடி நம்மையும் நாளை மோட்சத்திற்கு செல்ல பரிந்துரை செய்வார்கள். நம் உறவினர்கள், நண்பர்கள், யாரும் நினையா ஆன்மாக்கள் எத்தனை பேர் நம் ஜெபத்திற்காக ஏங்கி நிற்பார்களோ தெறியவில்லை. இப்போது நாம் அவர்களுக்கு உதவி செய்தால் நாளை நாம் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து வேதனை படும் போது யாராவது நமக்கு உதவி செய்வார்கள். உத்தரிக்கும் ஸ்தல வேதனை கொடுமையானது..ஆனால் ஒரே ஒரு ஆறுதல் அவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் மோட்சம் செல்வார்கள்.
எத்தனையோ புனிதர்களுக்கு உத்தரிக்கும் ஆன்மாக்கள், உத்தரிக்கும் ஸ்தலம் பற்றி அனுபவங்கள்,வெளிப்படுத்துதல் உண்டு. நண்பர் ஜேசு ராஜின் உத்தரிக்கும் ஆன்மா பற்றிய தொடர் மிகவும் பயனுள்ளது. அவற்றை படித்து உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றி தெறிந்து கொள்வது மட்டுமன்றி.. அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்...
ஏதோ நவம்பர் மாதம் மட்டும் அவர்களை நினைப்பதும்.. வருட்த்திற்கு ஒரு திருப்பலி அவர்களுக்காக ஒப்புக்கொடுப்பது போதாது... மாதம்.. அட்லீஸ்ட் வாரம் ஒரு முறையாவது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்..
அதேபோல் நாம் பங்குகொள்ளும் அத்தனை திருப்பலிகளிலும் அவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கலாம்.. ஜெபமாலைகளிலும் ஒப்புக்கொடுக்கலாம்...
நாம் இன்று அவர்களுக்காக ஜெபித்தால் நாளை நமக்காக யாராவது ஜெபிப்பார்கள்... மறவாதீர்கள் நண்பர்களே ! பரிதாபத்திற்குறிய உத்தரிக்கும் ஆன்மாக்களை...
லூக்காஸ் நற்செய்தியில் அரசனால் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியன்.. கடன் பட்டவர்களின் கடனை பாதியாக குறைத்து எழுதச் சொல்லி கடைசில் தலைவனால் மெச்சப்படும் அரசு ஊழியன்.. சீட்டு கிழிக்கப்படும் முன் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு உதவி செய்ததையே குறிக்கும்.. மீண்டும் ஒரு முறை வாசித்துப்பாருங்கள்...
- லூக்காஸ் 16: 1-9
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

No comments:
Post a Comment