குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
குடந்தை மறைமாவட்டம்
Dioecesis Kumbakonamensis
புள்ளிவிவரம்
பரப்பளவு : 7,823 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை : - கத்தோலிக்கர் (2004 இன் படி) 195,582 (7.5%)
மறை வட்டங்கள்(Vicariate) - 6
அவை
1.ஜெயங்கொண்டம் - 16
2.லால்குடி -17
3.கும்பகோணம்-14
4.மிக்கேல்பட்டி-11
5.பெரம்பலூர்-14
6.புல்லம்பாடி-15
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † பிரான்சிஸ் அந்தோனிசாமி
வரலாறு
*********
செப்டம்பர் 1, 1899: பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்டம் உருவானது.
கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் 1988 முதல் 2007 ம் ஆண்டு வரை கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
சிறப்பு ஆலயங்கள்
பேராலயம்: பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்
தலைமை ஆயர்கள்
**********************
ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)
ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)
ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)
ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)
ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)
ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)

Kudanthai marai mavatta makkal thaali kattuvathu sariyaa...?
ReplyDeletewhy what is the issue in that???
Delete