அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

அடைக்கல அன்னையே

அடைக்கல அன்னையே

அடைக்கலமும்
எம் புகலிடமும் நீரே

அன்பகமும்
அருள் நிறை தடாகமும் நீரே

அக்கறையும்
எமை சேர் விண்கரையும் நீரே

அத்தனையும்
எம் ஒரே சிந்தனையும் நீரே

அன்புக் கோட்டையும்
செப வேட்டையும் நீரே

அளவில்லா நலமும்
குறைவில்லா வளமும் நீரே

அற்புதமும்
அமல உற்பவமும் நீரே

அரவணைப்பும்
தீயோன் அழிவும் நீரே

அலங்காரமும்
எம் அதிகாரமும் நீரே

அழகோவியமும்
எம் காவியமும் நீரே

அன்றாட ஆற்றலும்
கொண்டாட தாயும் நீரே

அவலம் நீக்க
பாவம் விலக்க வழி நீரே

அலகை ஓடவும்
தீமை களையவும் ஆயுதம் நீரே !

அடைக்கல சபையினருக்கும்

அடைக்கலமான யாவருக்கும்
திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007⁠⁠⁠⁠

No comments:

Post a Comment