மரியாயே மாதவமே
ஆகட்டும் என்றதாலே எமக்கு ஆதரவான இதயமே
கலங்கினாலும் கடைசி வரை துணையான இதயமே
அடிமை என்றே உயர்ந்திட்ட உன்னத இதயமே
துணைவரோடு உழைத்து மகிழ்ந்த தூய இதயமே
கல்லிலும் முள்ளிலும் கலங்காத கனிவான இதயமே
தாழ்மையிலும் தனிமையிலும் நம்பி வாழ்ந்த வீர இதயமே
உறவுகளை கட்டிக்காத்து உறவின் பாலமான இதயமே
பெண்களுள் பேறுபெற்ற பொக்கிஷமான இதயமே
ஞானமும் விவேகமும் ஒன்றிக்கும் வியாகுல இதயமே
மீட்பரின் தாயாகி
எமக்கு எல்லாமான ஒப்பிலா இதயமே
மாசில்லா இதயமே
மாசகற்றி எமை சேசுவிடம் சேர்ப்பிக்கும் இதயமே
உம்மை நம்பினோரின் உள்ளங்களில் குடியிருக்கும் தாயே
மரியாயே !
மாதவமே !!
மாதரசியே !!!
அன்புடன்
கஸ்மீர் ரோச்

No comments:
Post a Comment