அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

கோதுமையும் தாழ்மையும்

கோதுமையும் தாழ்மையும்

சீடரோடு உரையாடி உரமேற்றுகிறார் இறைவன்

கோதுமை மணி பலன் தர அது மடிய வேண்டுமே

மடிந்தால் அதிக பலனை அதுவும் தந்திடுமே

இதை தெளிவாக சொன்னேன் உறுதியோடு ஏற்பீர் தோழர்களே

எல்லாம் தமக்கென்போர் இழப்பார் தம் வாழ்வினையே

வாழ்வை துறப்போர் பரிசாய் பெறுவர் நிலை வாழ்வினையே

என்னைப் பின்பற்ற எண்ணமுடையோர்
அங்ஙனம் தொடரட்டுமே

நானும் என் தொண்டரும் ஒன்றாக  இருப்போமே

என்னருமை தொண்டருக்கும் தந்தை மதிப்பளித்து மகிழ்வாரே

நாமும்
தொண்டராக,
பணியாளராக,
சேவகனாக,
தூதுவனாக,
இறை அடிமையாக,
அன்புக்குரியவனாக
மாறிடும் வேளை விண்ணக தந்தை நம்மையும் மகிழ்வோடு மதிப்பளிப்பாரே !

அந்த இணையற்ற மதிப்பை நமதாக்க இன்றே தாழ்த்துவோம் நம்மையே.....

யோவான் 12: 24 - 26

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை⁠⁠⁠⁠

No comments:

Post a Comment