அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

உயிர்த்தார் உயிர்த்தார்

உயிர்த்தார் உயிர்த்தார்

உன்னதர் இயேசு
உயிர்த்தார் - பாவ
உறக்கத்தை விரட்டவே
உயிர்த்தார்
உலகின் ஒளியாய்
உயிர்த்தார்
உறவை வளமாக்க
உயிர்த்தார்
உத்தமர் கிறிஸ்து
உயிர்த்தார்

உனக்காக, எனக்காக
உயிர்த்தார் - நம்
உயர்ந்த துணையாய்
உயிர்த்தார் - இறை
உண்மையான மாட்சியில்
உயிர்த்தார் -  அனைவர்
உள்ளம் மகிழவே
உயிர்த்தார்

உலகோர் பாவம் நீக்கிட
உயிர்த்தார்
உள்மன நோய் தீர்க்க
உயிர்த்தார்
உயிரின் உயிராய்
உயிர்த்தார்
உயர் விண்ணக ராஜனாய்
உயிர்த்தார் - நமக்கு
உதவிடும் மழையாய்
உயிர்த்தார்
உற்றத் தோழனாய்
உதித்தார்


உரைத்தவாறே நமக்காக
உயிர்த்தார் - உலகோர்
உள்ளக் கலக்கம் வீழ்த்திட
உயிர்த்தார் - நம்மை
உபயோக வாழ்வுக்கழைத்து
உயிர்த்தார்
உதவும் உள்ளமாய் மாற்றிட
உயிர்த்தார்
உறைவிடம் இல்லாரின்
உள்ளமதில் உயிர்த்தார்

உத்வேகம் யாம் பெற்றிட
உயிர்த்தார்
உண்மையின் இரட்சகர்
உயிர்த்தார்
உணர்வற்றோர் விழித்திட
உயிர்த்தார்
உச்சமான இறைமகனாய்
உயிர்த்தார்
உடன்படிக்கையை நிறைவேற்றி
உயிர்த்தார் - தம்
உடலும் குருதியும் வழங்கி
உயிர்த்தார்.


உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள் ! !

No comments:

Post a Comment