அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை ....

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை ....

பூமியில் விழுந்த விதை கூட
எதிர்பைச் சமாளித்து
முளைத்து காட்டுகிறது.

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சினைகளை சமாளிக்கின்றது.

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன.

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன.

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய
பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.

சிறியதான உடலையும்
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன.

தண்ணீரே இல்லாத
பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய
நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும் எங்கும்
ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும் அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன.

இப்படி பல கோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
நம்மால் வாழ முடியாதா?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை ....

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய்.
அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய்
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய்.
அதை ஏன் தப்பிக்க பார்க்கிறாய்
அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய்

சந்தோஷமாக ஒரு நாள் வாழ்ந்து பார்ப்போம்.

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்கு பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு மனதார நன்றி!

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம்
வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி!

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்கு புரியவைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி!

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடி சொல்லிக்கொடுத்த
எனது பலவீனத்திற்கும் உடலுக்கும் மனதார நன்றி!

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகு‌ந்த துயரத்தை தந்த என்னுடைய பிரச்சினைகளுக்கு மனதார நன்றி!

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்க்கை நானே நடத்த காரணமான
என்னை ஒதுக்கி தள்ளியவர்களுக்கு மனதார நன்றி!

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லி கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி!

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்கு தெளிவாக புரியவைத்த மரணத்திற்கு மனதார நன்றி!

என் பெற்றோரின் பெருமையை
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு மனதார நன்றி!

ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்த முடியும் என்பதை எனக்கு சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி!

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதை காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு மனதார நன்றி!

ஒவ்வொரு முறையும் பல மனிதரிடம் ஏமாந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி!

இன்னும் பலருக்கு செல்லவேண்டும்
ஆனால் இந்த வாழ்நாள் போதாது!

எனவே அனைவருக்கும் மனதார நன்றி பல!

No comments:

Post a Comment