அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 17, 2017

நீங்கள் உண்மையான கத்தோலிக்க கிறிஸ்தவர்களா? இல்லையா?

 நீங்கள் உண்மையான கத்தோலிக்க கிறிஸ்தவர்களா?  இல்லையா? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்???

கத்தேலிக்கர்கள் அதிக அளவில் புரியும் அற்ப பாவங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது மிக கடினம்

அ: சுய அன்பு, சுய நலம், நினைவு, வார்த்தை, மற்றும் செயல்களில் பல நூறு விதமான மோக பாவங்கள், நினைவு, வார்த்தை மற்றும் செயல்களில் பிறர் நலம் பேணாமை, சோம்பல், தற்பெறுமை, பொறாமை, வெதுவெதுப்பு தன்மை ஆகியவற்றால் இழைக்கும் பாவங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது

ஆ: நாம் புரியும் பல பாவங்கள் நம் கவனத்தில் கூட இருப்பதில்லை பல ஆயிரம் மடங்கு அன்பு செலுத்த கடமைபட்டுள்ள நம் கடவுளுக்கு மிகச்சிறிய அளவிலேயே அன்பை செலுத்துகிறோம் குறைந்த பட்ச நன்றியுணர்வு கூட இன்றி அவரை பொருட்படுத்தாமலேயே இருந்து விடுகிறோம்

இ: நம் ஒவ்வொருக்காகவும் இயேசு மரித்தார் இதற்க்காக நாம் செலுத்த வேண்டிய அளவு நன்றியினை அவருக்கு செலுத்தியுள்ளமா ? நமக்கு உதவி செய்யும் ஆவலேடு இரவும் பகலுமாக பலிபீடத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் எவ்வளவு அரிதாக அவரிடம் நாம் செல்கின்றோம் ! திவ்ய நற்கருணை மூலமாக நம் உள்ளத்தில் எழுந்தருளிவர ஆசையோடு இருக்கிறார் ஆனால் நாம் அவர் வருகையை எதிர்க்கிறோம் தினமும் திருப்பலியில் நமக்காக பலிபீடத்தில் மரித்து அப்பலியில் பங்கேற்கிற
அனைவருக்கும் அளவற்ற அருட்கொடைகளை வாரி வழங்கினாலும் இக்கல்வாரி பலிக்கு செல்ல பலருக்கு சோம்பேரிதனம் இறை அருளையும், கொடைகளையும் துர்பிரயோகம் செய்கிறோம்

ஈ: நமது இருதயத்தை தன்னலம், சுய விருப்பம் மற்றும் இழிசெயல்கள் என கடினபடுத்தி வைத்துள்ளோம் நமக்கு போதிய உணவு அருமையான உறைவிடம் தேவைகேற்ற உடைகள் என அளவற்ற வசதிகள் உள்ளன நம்மைச் சுற்றி பலரும் ஏழ்மைநிலையிலும் பசியிலும் வாழ்கின்றபோது அவர்களுக்கு மிகக்குறைந்த உதவிகளே செய்துவிட்டு நமக்காக ஆடம்பரமாகவும் தேவையற்றும் செலவு செய்து கொள்கிறோம்

கடவுளுக்கு ஊழியம் புரிந்து நமது ஆன்மாவை இரட்சித்துக் கொள்ளவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் காலை ஐந்து நிமிடம், இரவு ஐந்து நிமிடம் ஜெபிப்பதில் திருப்தியடைந்து விட்டு  24 மணி நேரத்தில் மீத உள்ள நேரத்தை வேலை, ஓய்வு மற்றும் பொழுது போக்கிற்காக செலவிடுகின்றனர் பத்து நிமிடம் மட்டுமே கடவுளுக்கு ஒதுக்கிவிட்டு அதாவது நமது அழியாத ஆன்மாவின் இரட்சிப்புக்கு நாம் செய்யவேண்டிய மிக பெரிய பணிக்கு பத்து நிமிடத்தை ஒதுக்கி விட்டு மீதமுள்ள இருபத்திமூனு மணி ஐம்பது நிமிடங்களை நிலையற்ற உலக வாழ்விற்க்காக செலவு செய்கிறோமே  இது கடவுளுக்கு ஏற்புடைய செயலா?

நமது வேலை ஓய்வு மற்றும் கஷ்டங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்பு கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பெரிதாக இருக்கும் ஆனால் பலர் பகல் பொழுதில் மிக அரிதாகவே கடவுளை நினைக்கின்றனர் என்பதே உண்மை அவர்கள் நினைவை பெரிதும் ஆக்கிரமிப்பிப்பது தங்களைப் பற்றிய நினைவுகளே  தங்களது எண்ணம் வேலை ஓய்வு மற்றும் உறக்கம் அனைத்தையுமே தங்களை திருப்திப்படுத்திக்கொள்ளவே மேற்க்கொள்கின்றனர் அவர்களது எண்ணங்களிலும் செயல்களிலும் கடவுளுக்கு மிக சிறிய இடமே ஒதுக்கபடுகிறது இது எப்பெழுதுமே நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் தேவனின் அன்பான இருதயத்திற்க்கு இழைக்க படும் துரோகமே  --ஆமேன்

என்னைப் படி அல்லது வருத்தப்படு என்கிற உத்தரிக்கிற ஸ்தல  புத்தகத்தின் பதிவு

இயேசுவுக்கே புகழ் !  மாமரித்தாயே வாழ்க

No comments:

Post a Comment