மனிதரும் - புனிதரும்
எண்ணிய வண்ணம் வாழ்ந்து
மறைந்தோர் மனிதர்
உம்மை எண்ணியே வீழ்ந்து
உயர்ந்தோர் புனிதர்
கண்டதே கோலம் என வீணே
வாழ்ந்தோர் மனிதர்
கண்ணால் உமை கண்டு மெய்
மறந்தோர் புனிதர்
நாவால் பகை சேர்த்து நலங்
கெட்டோர் மனிதர்
நாவால் உமை புகழ்ந்து நானிலம்
மகிழ்ந்தோர் புனிதர்
ஞானம் இன்றி புறம் பேசி பகை
சேர்த்தோர் மனிதர்
ஞான ஒளியாம் உமை கண்டு
வாழ்வடைந்தோர் புனிதர்
பூவுலகில் மதி கெட்டு விதி
நொந்தோர் மனிதர்
பூந்தளிர் மனம்கொண்டு உமக்காக
உயிர் நீத்தார் புனிதர்
விழியிருந்தும் குருடராய் வலம்
வந்தோர் மனிதர்
விண்ணரசை கைப்பற்ற தம் உயிர்
தந்தோர் புனிதர்
ஐம் புலனும் அடக்க மறந்து
மிருகமானோர் மனிதர்
ஐயன் இயேசுவை சுவைத்து
வாழ்வாக்கினோர் புனிதர்
கிடைத்தற்கரிய வாழ்வை கறைபடுத்திமரமானோர் மனிதர்
கிடைத்த நல் வாழ்வில் நல்லறம்
சேர்த்தோர் புனிதர்
ஜெயித்த போதெல்லாம் மமதைகொண்டோர் மனிதர்
ஜெபத்தில் ஒன்றித்து வெற்றிகளிப்படைந்தோர் புனிதர்
புனிதர்களை போற்றுவோம்
புனிதர்களை பின்பற்றுவோம்
இனிய சகல புனிதர் திருநாள் நல்வாழ்த்துகள்.
எண்ணிய வண்ணம் வாழ்ந்து
மறைந்தோர் மனிதர்
உம்மை எண்ணியே வீழ்ந்து
உயர்ந்தோர் புனிதர்
கண்டதே கோலம் என வீணே
வாழ்ந்தோர் மனிதர்
கண்ணால் உமை கண்டு மெய்
மறந்தோர் புனிதர்
நாவால் பகை சேர்த்து நலங்
கெட்டோர் மனிதர்
நாவால் உமை புகழ்ந்து நானிலம்
மகிழ்ந்தோர் புனிதர்
ஞானம் இன்றி புறம் பேசி பகை
சேர்த்தோர் மனிதர்
ஞான ஒளியாம் உமை கண்டு
வாழ்வடைந்தோர் புனிதர்
பூவுலகில் மதி கெட்டு விதி
நொந்தோர் மனிதர்
பூந்தளிர் மனம்கொண்டு உமக்காக
உயிர் நீத்தார் புனிதர்
விழியிருந்தும் குருடராய் வலம்
வந்தோர் மனிதர்
விண்ணரசை கைப்பற்ற தம் உயிர்
தந்தோர் புனிதர்
ஐம் புலனும் அடக்க மறந்து
மிருகமானோர் மனிதர்
ஐயன் இயேசுவை சுவைத்து
வாழ்வாக்கினோர் புனிதர்
கிடைத்தற்கரிய வாழ்வை கறைபடுத்திமரமானோர் மனிதர்
கிடைத்த நல் வாழ்வில் நல்லறம்
சேர்த்தோர் புனிதர்
ஜெயித்த போதெல்லாம் மமதைகொண்டோர் மனிதர்
ஜெபத்தில் ஒன்றித்து வெற்றிகளிப்படைந்தோர் புனிதர்
புனிதர்களை போற்றுவோம்
புனிதர்களை பின்பற்றுவோம்
இனிய சகல புனிதர் திருநாள் நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment