அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

திவ்ய நற்கருணை நாதர் – 2

திவ்ய நற்கருணை நாதர் – 2

 "வானினின்று இறங்கிவந்த உணவு நானே"
  அருளப்பர் 6 : 41

நமக்காக வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவிற்கு நாம் என்ன தருகிறோம்.. தன்னையே தந்த தெய்வத்திற்காக நாம் என்ன செய்கிறோம்..

“மலரினை நான் தந்தேன்…
அவர் மனதினைக் கேட்டு நின்றார்..
உள்ளதை நான் தந்தேன்…
உள்ளத்தைக் கேட்டு நின்றார்..”

என்று உருகி..உருகி பாடிவிட்டு அவர் நமக்குள் வரும்போதும்.. வந்த பின்னும் அவரை ஏதோ வாங்க வேண்டும்.. என்று வாங்கிவிட்டு நம்முடைய கவனத்தை மற்ற விசயங்களுக்கு திருப்பி விடுகிறோம்… நாம் நம் தெய்வத்திடம் பாடல் பாடி வேறு அவரை ஏமாற்றுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை..

நமக்குள் வந்த நம் ஆண்டவரை… கவனிக்காமல்..அவரை மதிக்காமல்…அவரிடம் பேசாமல் நாம் மற்ற விசயங்களுக்கு நம் செவியையும், கண்களையும் திறந்து வைத்தல் முறையா…?

நம் வீட்டுக்குள் பிரதம மந்திரி வந்தவுடன் அவரைக் கண்டுகொள்ளாமல் .. வேறு யாரிடமோ..எதையோ..பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்???
அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள்தானே… அதைக்கூட நம்மை படைத்தவருக்கு தரமாட்டேன் என்று சொல்வது தகுமோ?

நாளை மோட்சத்தில் கூட கிடைக்காத பாக்கியம் கடவுளே உணவாக உள்ளத்திற்குள் நம் ஆன்மாவிற்குள் நுழையும் பாக்கியம் நமக்கு கிடைக்கிறதே…

அந்த பரிசுத்தமான பரலோக நேரத்தை எத்தனை முறை வீனாக்கியுள்ளோம்..

அவரைப் புகழ்கிறோம்…இவரைப் புகழ்கிறோம்…அவருக்கு கரவொலி…இவருக்கு கரவொலி… பொன்னாடை…..புகழ்ச்சி.. எல்லாம் நடக்கிறது… ஆனால் நம் நாயகனை உள்ளத்தில் தனியே வைத்துவிட்டு..தவிக்க விட்டுவிட்டு…  அவரைக் கண்டுகொள்ளாமல்…நாம் பாட்டுக்கு எங்கெல்லாமோ.. சென்று விடுகிறோம்…

சில இடங்களில் நன்மை கொடுத்த அடுத்த நிமிடமே.. பாராட்டுவிழா..அறிக்கைகள்..என்று நன்றி கூறி மன்றாடுவதற்கு பதினைந்து முதல் முப்பது நிமிடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது நம் பிதா… நாம் திருப்பலியை யாருக்கு ஒப்புக்கொடுக்கிறோமோ… சர்வ வல்லமையுள்ள பிதாவையே காக்க வைப்பதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது..

“ நீரு (நீ) அப்படியே இரும்… எங்களுக்கு ஆயிரத்து எட்டு முக்கியமான வேலை இருக்கிறது…அதுதான் எங்களுக்கு முக்கியம் நீரு இல்லை…” என்பது போல் நடந்து கொள்வது சரியா?/ அவரை விட வேறு என்னங்க முக்கியம்…

(கொஞ்சம் கடினமாக இருப்பதுபோல் தோன்றுகிறது)

பிதாவின் இரக்கத்தை பெற திருப்பலிகளை நிறைவேற்றப்படுவதையும், திருப்பலிகளால் உலகத்தை காப்பாற்றப்படுவதையும் மறந்து உலகக்காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு சர்வ லோகத்தை படைத்த சர்வேசுவரனை பெண்டிங்கில்..அதாவது வெயிட்டுங்கில் வைப்பது முறையா???சர்வேசுவரனின் கோபத்தை அமர்த்தாமல் அவரின் கோப அக்கினியை அல்லவா தூண்டுகிறது…

முதல் கல்வாரி திருப்பலிக்காக தன்னை தயாரித்துக்கொண்டிருக்கும் போது நம் தலைவர் என்ன கேட்டார் தன் நேசத்திற்குறிய சீடர்களிடம்…
“"என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ? – என்று கேட்டார்..
அதே இயேசு சுவாமி இப்போது நம்மிடம்,
“ நான் உனக்குள் வந்த பின்பு ஒரு பதினைந்து நிமிடம் என்னோடு பேச மாட்டாயா? “ என்று கேட்கிறார்..

தூக்க கலத்தில் இருந்த சீடர்கள் போல் உலக மயக்கத்தில் இருக்கிறோம்..இருக்கிறோம்… என்று சொல்லி நாமும் நம் நற்கருணை நாதரை ஏமாற்றுவோமா??? சிந்திப்பீர்…

திவ்ய நற்கருணை நாதர் வழிபாட்டுக்கு பின்னால் நன்றி வழிபாட்டை உடனே நடத்துவதே..நம் திருச்சபையின் சட்டம்…

குறிப்பு : திவ்ய நற்கருணை நாதர் நம் உள்ளத்திற்கு வந்த பின் அவருக்காக..அவருடன் ஒரு பத்து நிமிடவாவது பக்தியுடன் செலவழித்தபின்பு… மற்ற அறிக்கைகள், மற்றவைகளை வைத்துக்கொள்ளலாமே? நற்கருணை வாங்கிய அடுத்த நிமிடம் அல்லது சில நிமிடங்களில் திருப்பலியின் நோக்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு சென்று விடுதல் முறையா? அல்லது நன்றி வழிபாட்டையாவது முடித்துவிட்டு செல்லலாமே… “ சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது என்பதை தவிர..இவற்றை செய்யாமல்…

நடுப்பூசையில் திருப்பலி புத்தகத்தில் இல்லாத ஜெபங்களை உருகி உருகி ஜெபிப்பதால் ஒரு பயனும் இல்லை..இந்த ஜெபங்களை ஒவ்வொருவரிடமும்… ஒவ்வொரு இயேசு சுவாமி வந்த பின் ஜெபித்தால் ரொம்பவே புண்ணியம் கிடைக்கும்…

யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்…

திரும்பவும் நம் பாரம்பரியம் வர ஜெபிப்போம்..,,, நவீனம் நம்மை அழிவுக்கே இட்டுச் செல்லும்… காலம் கடந்து விழித்துக்கொள்தல் விவேகம் அல்ல…

இயேசுவுக்கே புகழ் !! மரியாயே வாழ்க !!

No comments:

Post a Comment