பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...
பாகம்: 4.
நான் என் அலுவலகத்திற்குச் சென்றபோது Manilus-ஐக் கண்டேன். அவன் சீலோவாவிலே இயேசு பேசினவைகளைச் சொன்னான். எவ்வளவு பிரபலமான ஞானமுள்ளவனின் பேச்சுக்களையும், இந்த இயேசு பேசினவைகளுக்கு ஒப்பிட முடியாது.
மூர்க்க குணமுள்ளவர்கள் நிறைந்த எருசலேமில் உள்ள ஒரு குழப்பக்காரன், அவரிடத்தில் வந்து “இராயருக்கு வரி கொடுப்பது நியாயமா?” என்று கேட்டதற்கு, இயேசு அவனுக்கு மறுமொழியாக, “இராயருக்குள்ளதை இராயருக்கும், கடவுளுக்குள்ளதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார்.
இவ்வளவு கரை கடந்த ஞானம் நிறைந்தவர் ஆனதால், இந்த நசரேயனுக்கு முழு பேச்சுரிமையும் அளித்தேன். எனக்கு அவரைக் கைது செய்து தங்களிடம் அனுப்ப முழு அதிகாரமும் இருந்தது. அப்படிச் செய்வது, ரோம அரசாங்கம், நீதி தவறாத மனிதர்களை நல்லவிதமாய் நடத்திவரும் செயலுக்கு முரண்பாடாயிருக்குமல்லவா? இந்த இயேசு குழப்பம் அல்லது உபத்திரவம் உண்டாக்கவில்லை. என்னுடைய முழு பாதுகாப்பையும் அவர் அறியாமலே அவருக்கு நான் கொடுத்து வந்தேன். முழு சுதந்திரத்துடன் நடக்கவும், பேசவும், கூட்டங்களில் பிரசங்கிக்கவும், தனக்கு சீடர்களைத் தெரிந்து எடுக்கவும் அரசாங்க அனுமதி அளித்தேன். நம்முடைய முற்பிதாக்களுடைய மார்க்கம் அழிந்து போய் (அப்படி நடக்கக் கூடாது), இயேசுவின் மார்க்கம் உதித்தாலும், யூதர்கள் சொல்லுகிறது போல், கடவுள் நடத்துதல் என்றும், நாம் எண்ணுகிறபடி தலைவிதி என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் நான் தான் காரணம் என்ற எண்ணமே நிலை நிற்கும்.
இந்த அளவு கடந்த சுதந்திரத்தோடு இயேசுவை நடமாட அனுமதித்தது ஏழை யூதர்களையல்ல, ஜசுவரியவான்களாகிய அதிகாரமுள்ள யூதர்களையே கோபமூட்டினது. ஜசுவரியவான்களிடம் இயேசு கடினமான வார்த்தைகளையே பேசினார். நான் அரசாங்க நோக்கின்படி நசரேயனுக்குத் தடையுத்தரவு விதிக்கவில்லை.
இயேசு, சதுசேயர், பரிசேயரிடம் பேசினது:
“விரியன் பாம்புக் குட்டிகளே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, நீங்கள் மனிதர் முன்பாக நல்லவர்களைப் போல் நடித்து, உள்ளான இருதயத்திலே மரணத்துக் கொப்பான விசயத்தை அடக்கி வைக்கிறீர்கள்.” மற்றொரு முறை, மமதை கொண்ட ஜசுவரியவான்கள் தர்மம் செய்வதை இயேசு ஏளனம் செய்தார். ஏழைகள் தங்களால் இயன்றதை தர்மம் செய்வது கடவுள் சன்னிதியில் விலையேறப் பெற்றதாயிருக்கிறது. தினந்தோறும் கிறிஸ்து இயேசு அத்துமீறி நடப்பதாக எதிரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.

No comments:
Post a Comment