அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

உறவுகளையும் நினைப்போம்...

உறவுகளையும் நினைப்போம்...

ஆன்மாக்களை மறவாத நாம், நம்முடன் இருக்கும் உறவை மறந்தால் ?

இறந்த உறவுகளை நேசிக்கும் நாம், நம்மிடையே இருக்கும்
உறவை வெறுத்தால் ?

என்றோ இறந்த ஆத்துமத்துக்கு பலிபூசை ஒப்புக் கொடுக்கும் நாம், நிகழ்கால
 உறவை கடிந்தால் ?

உணர்வில் நிறைந்த இறந்தோரை சிந்திக்கும் நாம், இன்றைய உறவை நிந்தித்தால் ?

உருகி உருகி மரித்தோருக்காக அழும் நாம், இன்று அழும்
உறவை வதைத்தால் ?

வாழ்வில் பயணித்த உறவுகளை நினைவில் கொள்ளும் நாம்,பயணிக்கும்
உறவை வஞ்சித்தால் ?

இறந்த உறவுகள் நம் கண்ணில் நீரை அளிக்கையில்,நாம் நம்மில் உலவும்
உறவை சிதைத்தால் ?

மரித்தோர் நினைவு மாதத்தில் உறவுகளையும்  உரமாக்குவோம்.

No comments:

Post a Comment