அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பாகம்: 3.

என் செவிகளுக்கு எட்டின அநேகக் காரியங்களில் என்னைக் கவர்ந்தது என்னவெனில், கலிலேயா நாட்டிலுள்ள ஒரு வாலிபர் தன்னை அனுப்பின கடவுளைப்பற்றி மேன்மையான உபதேசங்களைக் கூறி வருகிறார். துவக்கத்தில், அவர் குடிமக்களை ரோமராஜ்யத்திற்கு விரோதமாய் குழப்பத்திற்கு ஏதுவாய் வழி நடத்துகிறார் என்று பயந்த நான், அப்படி இல்லை என்று திட்டவட்டமாய் அறிந்து கொண்டேன்.

நாசரேத் ஊரானாகிய இயேசு, தன்னை ரோமருக்கு ஒரு நல்ல நண்பனாகவே காண்பிக்கிறார். நான் ஒரு நாள், சீலோவாம் ஊர் அருகில், ஒரு மாபெரும் கூட்டத்தின் நடுவில், ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று, கூடி நின்றவர்களுக்கு அமைதியாய்ப் பிரசங்கம் செய்யும் ஒரு வாலிபனைக் கண்டேன். அவர்தான் இயேசு என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

நான் அங்கு கூடியிருந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும், பிரசங்கிக்கிற இயேசுவையும், கண்டபோது சந்தேகப்பட்டேன்.

அவருக்கு சுமார் 30 வயதிருக்கும். இவரைப் போல் அழகும், சாந்தமும் நிறைந்த முகத்தையுடைய ஒருவரை நான் ஒருக்காலும் கண்டதில்லை. பிரசங்கிக்கிறவருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினருக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன?. கூட்டத்தினர் விரும்பப்படத்தகாத ரூபமும், நீண்ட, கருத்த தாடிகளையும் உடையவர்களாய் இருந்தனர்.

கூட்டத்தைக் கலைக்க மனமில்லாமல் நான் கடந்து சென்று, என்னுடைய காரியதரிசியை அங்கு சென்று கவனமாய்க் கேட்டுவர அனுப்பி வைத்தேன். எனது காரியதரிசியின் பெயர் Manilus. Etruria  என்ற இடத்தில் தங்கியிருந்த குழப்பக்காரத் தலைவனுடைய பேரன் இவன். Manilus,  யூதேயா தேசத்தில் நெடுங் காலமாய் வாழ்ந்து செய்து, எபிரேய மொழியைக் கற்றிருந்தான். எனக்கு அவன் மேல் பூரண நம்பிக்கையும், அபிமானமும் உண்டு.

No comments:

Post a Comment