பயனென்ன ?
நீரை பாய்ச்சி
மண்ணை வளப்படுத்தி
ஏர் விட்டு
விதை நட்டு
கண்ணும் கருத்துமாய்
பராமரித்தால் பெறும் பயன்
நல்ல விளைச்சல்.
காய் வெடித்து
பருத்தி பஞ்செடுத்து
பராமரித்து
நூல் நூற்றால் பெறும் பயன்
நல்ல ஆடை
படகை பயன்படுத்தி
காற்றை வசப்படுத்தி
ஆழ்கடலில் வலை வீசினால் கிடைக்கும் பயன்
வளமான மீன்கள்
நீரோடு, கல்லெடுத்து
சிமிட்டியோடு,மணல் சேர்த்து
இரும்போடு கலந்தால் பயன்
அழகு வீடு
அன்பு மகனா(ளா)ய்
தேர்ந்தெடுத்து
நாளெல்லாம் காத்து
அல்லும் பகலும்
நம்மை நினைத்து
நமக்காக மரித்து
நம்மை தன்பால் இணைத்து
வைத்திருக்கும்
இறைவன் பெறும்
பயன்..........?
பயனளிக்கும் மக்களாவோம்.
பயனளித்து பலன் பெறுவோம்.
பலனோடு நாம் மற்றவருக்கும்
பயனாவோம்.
நீரை பாய்ச்சி
மண்ணை வளப்படுத்தி
ஏர் விட்டு
விதை நட்டு
கண்ணும் கருத்துமாய்
பராமரித்தால் பெறும் பயன்
நல்ல விளைச்சல்.
காய் வெடித்து
பருத்தி பஞ்செடுத்து
பராமரித்து
நூல் நூற்றால் பெறும் பயன்
நல்ல ஆடை
படகை பயன்படுத்தி
காற்றை வசப்படுத்தி
ஆழ்கடலில் வலை வீசினால் கிடைக்கும் பயன்
வளமான மீன்கள்
நீரோடு, கல்லெடுத்து
சிமிட்டியோடு,மணல் சேர்த்து
இரும்போடு கலந்தால் பயன்
அழகு வீடு
அன்பு மகனா(ளா)ய்
தேர்ந்தெடுத்து
நாளெல்லாம் காத்து
அல்லும் பகலும்
நம்மை நினைத்து
நமக்காக மரித்து
நம்மை தன்பால் இணைத்து
வைத்திருக்கும்
இறைவன் பெறும்
பயன்..........?
பயனளிக்கும் மக்களாவோம்.
பயனளித்து பலன் பெறுவோம்.
பலனோடு நாம் மற்றவருக்கும்
பயனாவோம்.
No comments:
Post a Comment