அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

விளக்கு எரிய எண்ணெய் தேவையே!

விளக்கு எரிய எண்ணெய் தேவையே!

விழிகள் இரண்டும்
திறக்கும் தருணம்
விந்தைகள்
உலகினில் நடக்குகிறது
விழிகள் மூடி
கல்லறைக்குள்
உறங்கும் போது
உலகினில் மாற்றங்கள்
நிகழுகிறது
நித்தமும் ஒலிக்கும்
குண்டுகள் மழைகள்
கொஞ்சம் காதோரம் ஒலிக்காமல்
ஒதுங்கி நிற்கிறது
சிந்தையைக் கிளறி
சிந்தனைகளைத் தேடும்
அறிவுச்சார் தேடல்கள்
உலகினை நிரப்பிட
உன்னத இறைவனின்
அழைப்புக்குரல் கேட்கிறதே!
விழிப்போடு வாழ்வதே
மானிடரின் விருப்பம்
விழிப்போடு பயணிப்பதே
மனிதர்களின் ஆசை
ஆனால்
வெறுப்போடும்
மனதில் ரணத்தோடும்
வாழும் எதார்த்தம்
இம்மண்ணுலகில்
எட்டிப்பார்த்து விட்டன
என்பதே அவலத்தின் அழுக்குரல்!
விளக்குகளுடன்
மணமகனை எதிர்நோக்கும்
பத்து தோழியர்கள்
எண்ணெய் நிரப்பிய
விளக்குகளுடன் எதிர்வரும்
மணமகனை அன்போடு
அழைக்க ஆவல்கொள்கின்றனர்!
மன்னவனும் வந்தார்
தோழியரும் சென்றார்
பத்துபேர் அல்ல ஐவரே!
என்னாயிற்று...
நற்செய்தியின் வரிகள்
நயமுடன் பேசுகிறது
விவேகத்தோடு செயல்பட்டோர்
திருமணவிழாவில் நுழைந்தனர்
வேகத்தோடு சென்றவர்கள்
கதவருகே தட்டியவண்ணம் நின்றனர்!
தட்டிய கதவுகளுக்கு இதுவே பதில்:
‘உறுதியாகச் சொல்கிறேன்
எனக்கு உங்களைத் தெரியாது’
முதல் வாசகத்தில்
தென்படும் ஞான உணர்வு
இரண்டாம் வாசகத்தில்
உணர்த்தப்படும் புதுவாழ்வு
நற்செய்தி வாசகத்தில்
பேசப்படும் விழிப்புணர்வு
இவைகள் நம்மில் உணரப்படவில்லையெனில்
வாழ்வோடு உரசவில்லையெனில்
வழிபாட்டோடு பொருத்திப் பார்க்கவில்லையெனில்
விவேகிகளாக அல்ல அறிவிலிகளாகவே
தரணியை அலங்கரித்து
மணமகனைச் சந்திக்காத
தோழியாரகவே இருப்போம்
என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு!
எண்ணெயோடு வந்தவர்கள்
விளக்கை எரியச் செய்தனர்
எண்ணெயோடு வராதவர்கள்
விளக்கின் நிலைக்கண்டு வியந்தனர்
இது வெறும் எண்ணெயா? இல்லை
வாழ்வியல் மதிப்பீடுகள்!
விளக்கு என்பது நம் வாழ்வு
எண்ணெய் என்பது நம் மதிப்பீடுகள்
மதிப்பீடுகள் எண்ணெயாகவில்லையெனில்
வாழ்வு நிச்சயம்
எரியாத விளக்காகவே மாறிவிடும்
அப்போது
விளக்கும் எரியாது
மணமகனையும் சந்திக்க இயலாது!
உணர்ந்துக்கொள்வோம் மானிடரே,
அன்பும்
தாராள மனமும்
கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும்
பகிரும் உள்ளமும்
நம் விளக்குகளில்
ஊற்றப்படும் எண்ணெயானால்
அது நிச்சயம் எரியும்
மணமகனைச் சந்திக்க வாய்ப்பும் புலரும்!
அதற்கு எதிர்மாறாய்,
வெறுப்புடனும்
பொறாமையுடனும்
பொருள் சேர்க்கும் மனநிலையுடனும்
கஞ்சத்தனத்துடனும் வாழ்கையில்
விளக்கும் எரியாது
மணமகன் வரும் வேளையில்
அவரைச் சந்திக்கவும் இயலாது...
சிந்திப்போம்
சிரமம் எடுத்து
வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்போம்
திறக்கும் கதவிற்குள் சென்றிடும்
விவேகமுள்ள தோழியராய்
உள்ளே செல்கின்றோமா ?
அல்லது
கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கும்
அறிவிலிகளாய் நிற்கின்றோமா?
விழிப்போடு எதிர்நோக்குகையில்
விளக்குகள் என்றுமே எரியும்
விவேகமுள்ள மனிதர்களாய் வாழ்கையில்
ஆண்டவனைச் சந்திக்க என்றுமே வழிப்பிறக்கும்
எண்ணெய் அற்ற விளக்குகளாய்
மதிப்பீடுகள் இல்லா மனிதர்களாய்
வாழ்வதைவிட
எண்ணெயோடு இருக்கின்ற விளக்குகளாய்
மதிப்பீடுகளைச் சுமந்து செல்லும்
மனிதர்களாய் வாழ்வோம்!
நம்முடைய வளர்ச்சியில்
மற்றவர்களுக்கும் பங்கு அளிப்போம்!!
வளர்வோம், மற்றவர் வளர்ந்திட
வழியமைப்போம்!!!

No comments:

Post a Comment