அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

பொறுப்புள்ள, முன்மதியுள்ள பணியாளர்களாவோம்

பொறுப்புள்ள, முன்மதியுள்ள பணியாளர்களாவோம்

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். - லூக்கா 16: 1-8

அப்பா, அம்மா, அவர்களுடைய ஒரே மகன் என்றிருந்த ஒரு குடும்பத்தின் தொலைப்பேசிக் கட்டணம் அதிகமாக வந்தது. உடனே குடும்பத் தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.
“நான் நம்ம வீட்டு போனை உபயோகப்படுத்துவதே இல்லை. ஆனாலும், இவ்வளவு தொகை  வந்திருக்கே பாருங்க... யார் காரணம்?” என்றார் அவர். “நானும் அலுவலக தொலைபேசி மட்டுமே உபயோகப் படுத்துகின்றேன். எனக்குத் தெரியாது” என்றார் அம்மா.
அவர்களைத் தொடர்ந்து பேசிய மகன், “நான் காரணம் இல்லப்பா. நாமும் என் அலுவலக செல்போனைத் தான் எப்போதும் உபயோகப்படுகின்றேன். எனக்கும் தெரியாதுப்பா” என்றான் மகன்.
இப்போது அனைவருக்கும் அதிர்ச்சி “நாம யாரும் உபயோகப்படுத்தலனா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்” என்று எல்லாரும் தலையைச் பிய்த்துக்கொண்டு இருந்தார்கள். அது வரைக்கும் அமைதியாக இருந்த அந்த வீட்டில் வேலைபார்த்து வந்த வேலைக்காரி, “உங்களை மாதிரிதான் நானும்... என்னோட அலுவலக தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகின்றேன்” என்றாள். கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்.
பொறுப்பற்ற மனிதர்களை வைத்துக்கொண்டு செயல்பட்டால் ஒரு குடும்பமானாலும் சரி, நிறுவனமானாலும் சரி, நாடானாலும் சரி உருப்படவே உருப்பாடது என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் உவமை’யைக் குறித்துப் படிக்கின்றோம். இயேசு கூறும் இந்த உவமையைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், இஸ்ரயேல் மக்களின் சமூக நடைமுறைகளை, அவர்களுடைய வாழ்வியலைக் குறித்து புரிந்துகொள்ளவேண்டும். இஸ்ரயேல் நாட்டில் நிலக்கிழார்கள், பெரும் சொத்துகளுக்கு அதிபதிகளாக இருந்தவர்கள் என்று பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய உடைமைகளை பொறுப்பாளர்களிடம் விட்டுவிட்டு நெடும்பயணம் சென்றுவிடுவார்கள். பொறுப்பாளர்கள் அல்லது குத்தகைக்காரர்கள்தான் தலைவருடைய உடைமையை பராமரித்துக்கொண்டு இருக்கவேண்டும். இதுதான் அவர்களுடைய வழக்கமாக இருந்தது.
இயேசு கூறுகின்ற உவமையில் வரும் தலைவரும் எல்லாவற்றையும் வீட்டுப் பொறுப்பாளரிடமே ஒப்படைகின்றார். ஆனால், வீட்டுப் பொறுப்பாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மை இல்லாதவர் என்று கண்டுபிடிக்கப்படுகின்றார். தன்னுடைய தவறு தலைவருக்குத் தெரிந்ததை அறிந்த வீட்டுப் பொறுப்பாளர் மிகவும் முன்மதியோடு நடந்துகொள்கின்றார். இதைப் பார்க்கும் தலைவர், வீட்டுப் பொறுப்பாளர் பொறுப்பற்ற விதமாய் நடந்து கொண்டாலும் அவர் முன்மதியோடு செயல்பட்டதைக் கண்டு பாராட்டுகின்றார் .
இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, “ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கின்றார்கள்” என்கின்றார். இயேசு இவ்வார்த்தையின் வழியாக நமக்கு என்ன செய்தியைத் தருகின்றார் என்று இப்போது பார்ப்போம்.
வீட்டுப் பொறுப்பாளர் தன்னுடைய பொறுப்புகளில் உண்மையில்லாதவராக இருந்தாலும், அவரிடம் இருக்கும் முன்மதியை நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று ஆண்டவர் இயேசு சொல்கின்றார். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல, பொறுப்பற்ற பணியாளரிடம் இருக்கும் முன்மதியை நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்கொள்ளச் சொல்கின்றார் இயேசு.
கிறிஸ்தவ வாழ்விற்கு முன்மதியானது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. ஏனென்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம் சூழ்ச்சி நிறைந்ததாகும், தந்திரம் நிறைந்ததாகும் இருக்கின்றது. இப்படிப்பட்ட உலகில் நாம் முன்மதியோடு செயல்படாவிட்டால், பாதிக்கப்படக்கூடியவர்கள் என்னவோ நாமாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் ஆண்டவர் இயேசு, “புறாக்களைப் போன்று கபடரற்றவர்களாகவும், புறாக்களைப் போன்று முன்மதியுள்ளவர்களாகவும் இருங்கள்” (மத் 10:16) என்று நமக்கு அறிவுரை வழங்குகின்றார். நீதிமொழிகள் புத்தகம் 3:21 கூட, “விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்; இவற்றை எப்போதும் உன் கண்முன்னே நிறுத்தி வை” என்கின்றது. ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் முன்மதியோடு நடந்துகொள்கின்றோமா? என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
முன்மதி என்பது வேறொன்றுமில்லை. அது எதிர்காலத்தில் வரக்கூடிய ஒன்றைக் குறித்து முன்கூட்டிய திட்டமிட்டு நடந்துகொள்வது. இயேசு சொல்லும் உவமையில் வரக்கூடிய வீட்டுப் பொறுப்பாளரும் தன்னுடைய வேலை பறிக்கப்பட்டுவிட்டால், எதிர்காலத்தில் என்ன செய்வது குறித்து தீவிரச் சிந்தித்து செயல்படுகின்றார். அது போன்று நாமும், எதிர்வரும் காலத்தில் எப்படி நடந்து கொள்வது, கிறிஸ்தவ வாழ்க்கையில் வரும்  பிரச்னைகளையும் சவால்களையும் துன்பங்களையும் எப்படி எதிர்கொவ்ளது என்பதைக் குறித்தெல்லாம் சிந்தித்துப் பார்த்து முன்மதியோடு நடந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் நம்மால் இந்த உலகத்தில் நிலைத்து நிற்க முடியும்.
எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், முன்மதியோடு நடந்து கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment