பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...
பாகம்: 1
பொந்தியு பிலாத்து (/ˌpɒn[invalid input: '(t)']ʃəs ˈpaɪlət/ அல்லது /ˌpɒnti.əs ˈpaɪlət/,[ இலத்தீனில்:Pontius Pilatus) என்பவர் கிபி. 26-36 வரை உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா பிரதேசத்தின் ஐந்தாம் ஆளுநராக இருந்தவர் ஆவார். இவர் திபேரியுஸ் அரசரின் ஆட்சிக்காலத்தில் இயேசு கிறித்துவின் வழக்கை விசாரித்து அவரை சிலுவையில் அறைந்து கொல்ல தீர்ப்பளித்ததால் மிகவும் அறியப்படுகின்றார்.
பிலாத்து கல்வெட்டின் கண்டு பிடிப்பால் இவர் வரலாற்றில் வாழ்ந்த நபர் என்பது உறுதியானது. இக்கல்வெட்டோடு நான்கு நற்செய்திகள், நிக்கதேம் நற்செய்தி, மார்சியோன் நற்செய்தி மற்றும் ஜொசிபெசின் குறிப்புகளால் இவரைக்குறித்த செய்திகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து இவர் பொந்தியு குடும்பத்தை சேர்ந்த உரோமை வீரர் எனவும் வெலேரியுஸ் கிராதியுஸுக்கு அடுத்து யூதேயாவின் ஆளுனராக கி.பி 26இல் பதவி ஏற்றார் எனவும் தெரிகின்றது.
இவரின் ஆட்சிகாலத்தில் சாமாரியர்கள் செய்த கிளர்ச்சியை அடக்க முனைந்த போது யூத சமயத்தினரின் மனம் நோகும்படி நடந்ததால் இவரை உரோமைப்பேரரசர் அழைத்து கண்டித்து பதவியிலிருந்து நீக்கியதாக ஜொசிபெஸ் குறிக்கின்றார். இவருக்குப்பின்பு மார்செலுஸ் ஆட்சி செய்தார்.
நான்கு நற்செய்தி நூல்களும் இவர் இயேசுவை விடுவிக்க முயன்றதாக குறிக்கின்றது. இவரின் முயற்சி தோற்றதால் இயேசுவின் இறப்புக்கு தான் பொருப்பல்ல என கைகழுவியதாக மத்தேயு நற்செய்தி குறிக்கின்றது. மாற்கு நற்செய்தி, தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் இயேசுவை தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்று பிலாத்து உணர்ந்திருந்ததாகவும், லூக்கா நற்செய்தியில் ஏரோதுவேடு பிலாத்தும் இயேசுவில் குற்றம் காணவில்லை எனவும், யோவான் நற்செய்தியில் பிலாத்து "பாருங்கள். அவனிடம் (இயேசுவிடம்) நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று அறிக்கையிட்டதாகவும் குறிப்பிடுகின்றது. எணினும் பிலாத்து யூதர்களுக்கு பயந்து இயேசுவை கொல்ல அவர்களுக்கு அனுமதியளித்ததாக கூறுகின்றது.
இயேசுக் கிறிஸ்துவைக் கைது செய்தது, நீதி விசாரணை நடத்தியது, சிலுவையில் அறைந்தது, அவர் அடக்கம் பண்ணப்பட்டது, அதன் பின்பு அவர் உயிர்த்தெழுந்தது ஆகியவை பற்றி, பொந்தியு பிலாத்து, சீசருக்கு அனுப்பிய அறிக்கை.
(துருக்கி இராஜ்யத்திலுள்ள கான்ஸ்ற்றேன்றிநோபுள் பட்டணத்தில் இருக்கும் பரி. சோபியா பள்ளிவாசலில் உள்ள கைப்பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு.)
[மேசியாவின் காலத்தில் அரசாங்க அலுவலகத்தில் எழுதப்பட்ட பத்திரம் - கான்ஸ்ற்றேன்றி நோபுளிலுள்ள கைப்பிரதி – பரி. சோபியா பள்ளிவாசல், துருக்கி இராஜ்யத்தில் உள்ளது – குறைவு படாத பத்திரம் - இவைகள் சதுசேயருடைய கைப்பட 50 புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. – ஒவ்வொரு புத்தகமும் 2 அடி அகலமும், 4 அடி நீளமும் உள்ளது – அனுமதி பெற்றவர்களுக்குக் குறைந்த செலவில் படிப்பதற்கு அனுமதிக்கப்படும். -Sir.Donald. N. Lindman, M.D, PhD., என்பவர் வணக்கத்துடன் அனுப்பியது.)
(Sir. Valleus என்பவரின் குறிப்பு:- பிலாத்து இராயருக்கு, இயேசுவைக் கைது செய்து, நீதி விசாரணை நடத்தி, சிலுவையில் அறைந்தது குறித்த செய்தி.)
Sri. Valleus ஒரு ரோம சரித்திரக்காரன் - கிறிஸ்து பிறந்த போது அவருக்கு வயது 19. அவர் எழுதினவைகள் எல்லாம் பயனற்றுப் போய் விட்டன. ஆனாலும், Prisician and Tacitus என்ற இரு வரலாற்று ஆய்வாளர்கள், Campania எழுதினதை அறிவார்கள். அவர் Campania என்ற இடத்திலுள்ள குதிரைப்படை வீரன் ஒருவனுடைய மகன். இதன் நிமித்தம் Valleus, சீசருக்கு நண்பன் என்றும் தெரிகிறது. மேலும், சீசர் அவரை ஒரு குதிரைப்படைக்குத் தலைவனாக்கி, 16 வருடம் அந்தப் பதவியில் வைத்திருந்தார். 31ம் வருடத்தில், அவர் ரோமாபுரிக்கு வந்து, ரோமாபுரியின் வரலாற்றையும் எழுதியிருக்கிறார். அகஸ்த்துராயன் இறக்கும் தருவாயில் இவர் ஒரு நியாயாதிபதியாக இருந்தார்.
Sri. Valleus, சொல்லுகிறது என்னவெனில்;
நான் யூதேயா நாட்டிலுள்ள நாசரேத் ஊரிலே ஒருபொழுதும் கண்டிராத ஆச்சரியமான, குணசீலனாகிய இயேசு என்னும் ஒருவரைச் சந்தித்தேன். நான் அவரைக் காணும் போது, ஒரு படையைக் கண்டு அஞ்சுவதை விட, அதிகமாகப் பயந்து நடுக்கம் கொண்டேன். ஏனெனில், அவர் எந்த வகையான நோய்களையும் குணமாக்குகிறார். மரித்துப் போனவர்களுக்கு புது ஜீவன் அருளுகிறார்: காய் கனிகளற்ற தோப்புகளையும், மரங்களையும் சபித்தால் வேருடன் கருகிப் போகிறது. இவ்வளவு வல்லமை பொருந்தினவராய் இருந்தும், இயேசு ஒருவரையும் துன்பப்படுத்தவில்லை. தீங்கு விளைவிக்கவும் இல்லை. யாவருக்கும் நன்மையையே செய்து வந்தார். யூதருக்குள்ளே இரு வகையான கருத்துக்கள் இருந்தன. எளியமக்கள் இயேசுவைத் தங்களுடைய ராஜா என்றும், ரோமருடைய அதிகாரத்திலிருந்து தங்களை விடுவிப்பார் என்றும், அவர் ஒரு படையைத் திரட்டி வல்லமை கொடுப்பாரானால் ஒரே நாளில் உலகம் முழுவதையும் சின்னா பின்னமாக்கிப் போடுவார் என்றும் நம்பினார்கள். ஆனால் செல்வந்தர்களான யூதர்களோ அவரை மிகவும் விரோதித்தார்கள். அவர் முதுகுக்குப் பின்னால், அவரைச் சபித்தார்கள். அவரை எகிப்திய மந்திரவாதி என்றும் சொன்னார்கள். இவ்வளவு இருந்தும், இயேசுவைப் பற்றிய மரணத்துக்கேதுவான பயம் அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. (Valleus Paterculus, B.72 found in the Vactican at Rome.)
No comments:
Post a Comment