அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பாகம்: 2.

பிலாத்துவின் அறிக்கை..!

மாட்சிமை தங்கிய ரோமாபுரி அரசருக்கு,

வணக்கத்துடன் தெரிவிப்பது என்னவென்றால்,

கடந்த சில நட்களாக என்னுடைய மாகாணத்தில் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் நம்முடைய ஆளுகையை மாற்றியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், எல்லாக் கடவுள்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

நான் Vallerius ஆட்சிக்குப்பின், யூதேயாவில் கால் எடுத்து வைத்த நாள் முதற் கொண்டு ஓய்வில்லாத மனச்சோர்வையும், துன்பத்தையும் தான் அனுபவிக்கிறேன்.

நான் எருசலேமிற்கு வந்து கவர்னர் பதவியை ஏற்றுக் கொண்ட போது, ஒரு உன்னதமான விருந்து தயார் செய்து, கலிலேயாவிலுள்ள காற்பங்கு தேசாதிபதியையும், பிரதான ஆசாரியரையும், அவருடைய அலுவலகத்திலுள்ள அதிகாரிகளையும் விரும்பி அழைத்திருந்தேன். குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. இதை எனக்கும், ரோமாபுரி அரசாங்கத்திற்கும் இழைக்கப்பட்ட ஓர் அவமரியாதையாகவே நான் கருதுகிறேன்.

சில நாட்கள் சென்ற பின்பு, நான் பிரதான ஆசாரியரை அழைத்த போது, அவர் என்னை மதிக்காமல் வரவில்லை. அவர் வராமலிருந்தது மிகவும் மோசமான ஏமாற்றுதல் என கருதுகிறேன். அவர் தன்மார்க்க சட்டத்தை அனுசரித்து, ரோமருடன் ஒரே மேசையிலிருந்து உணவும், மதுபானமும் அருந்துவது தடைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். இது ஒரு பொய்யான கூற்று என்று அவருடைய முகமும், விழியும் தோற்றுவித்தது.

நான் அவருடைய விளக்கத்தைத் தற்போது ஒப்புக் கொண்டாலும், ஓர் அரசாங்கத்தால் ஆளப்படுகிறவர்கள் தங்களைச் சத்துருக்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது.

பிரதான ஆசாரியர்களைக் குறித்து ரோமாபுரியர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பதவிகளைக் கைப்பற்றவும், ஆடம்பர ஜீவியம் நடத்தவும் தங்களுடைய சொந்தத் தாயையும் பயன்படுத்துவார்கள். நாம் கைப்பற்றியிருப்பதில் எருசலேம் நகரமானது அரசாள்வதற்கு மிகவும் கடினம். எந்த நேரத்திலும், எருசலேம் மக்கள் குழப்பம் உண்டாக்குவார்கள் என்று நான் மிகவும் திகிலடைந்திருக்கிறேன். அவர்களை அடக்குவதற்குப் போதுமான அளவு படை என்னிடம் இல்லை. தற்பொழுது என்னிடம், ஒரு நூற்றுக்கதிபதியும், நூறுபேர் கொண்ட ஒரு படையும் தான் இருக்கிறது. சிரியா தேசத்து கவர்னரிடமிருந்து, எனக்கு ஒரு படை வேண்டுமென்று விண்ணப்பித்ததற்கு, தனக்கே தற்காப்புக்குப் போதுமான படை இல்லையென்று தர மறுத்து விட்டார். மேலும், நமது ராஜ்யத்தை வழி நடத்திச் செல்ல வேண்டுமென்ற ஆசை, நமது அரசாங்கத்தையே கவிழ்த்துப் போடுமென்று நான் அஞ்சுகிறேன்.

நான் இதற்குப் பயந்து அவர்களுடன் அதிகமாய் உறவு வைத்துக் கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறேன். இங்குள்ள குடிமக்களின் மனநிலை எவ்விதம் இருக்கிறதென்று அறிய நான் முயற்சி செய்கிறேன்.

No comments:

Post a Comment