அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

மோட்சம், நரகம் குறித்து நம் தலைவரின் மேலும் சில திருவார்த்தைகள்

மோட்சம், நரகம் குறித்து நம் தலைவரின் மேலும் சில திருவார்த்தைகள் :

அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே, சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.

இது ஐந்து தாலந்துகள் பெற்று மேலும் ஐந்து தாலந்துகள் சம்பாதித்த நல்ல ஊழியனை மெச்சி அவனுக்கு மோட்சத்தை பரிசாக தருகிறார் தலைவர்…இரண்டு தாழந்து பெற்று மேலும் இரண்டு தாலந்துகள் பெற்றவனுக்கும் மோட்சம்...

ஆனால் ஒரு தாலந்து பெற்று மேலும் ஒரு தாலந்து கூட சம்பாதிக்காமல் மறைத்து வைத்தானே ( தன் சொந்த ஆன்மாவைக் கூட மீட்க வழியில்லாதவனுக்கு விழும் பாட்டைப் பாருங்கள்...

' கெட்ட ஊழியனே, சோம்பேறியே,……….". என்று திட்டி விட்டு

"பயனற்ற ஊழியனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்' என்றார்.

-மத்தேயு 25 : 20-30)

இது நரகம் குறித்து நம் தலைவர் உதிர்த்த கூர்மைமான வார்த்தைகள்..

சிந்தனை : ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு கத்தோலிக்க சபையினருக்கும்..(அன்பியங்கள் உட்பட), அருட்தந்தையர்களுக்கும், அருட்சகோதரிகளுக்கும், ஆயர்களுக்கும் அவர்கள் நிலைக்கு ஏற்றவாறு அவர்களிடம் கடவுள் நிறைய ஆன்மாக்களை  ஒப்படைத்துள்ளார்..

அவர்களை அவர்கள் எப்படி வழிநடத்துகிறார்கள்?? வழி காட்டுகிறார்கள்…அவர்களையும், அவர்களை வைத்தும் மேலும் பல ஆன்மாக்களை மீட்கிறார்களா? அல்லது தவறாக வழி காட்டி ஒப்படைக்கப்பட்ட ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்ல காரணமாக இருக்கிறார்களா?? இருக்கின்றோமா??..

சிந்திப்போம்…நம்  எல்லோரிடமும் கணக்கு கேட்கப்படுவது உறுதி….நமக்கு ரொம்பவே அருள் வளங்களையும், ஆசீரையும்,  நலன்களையும் ,வாய்ப்புகளையும் கொடுத்த கடவுள் கணக்கு வாத்தியார்தான்.. ஆம். கண்டிப்பான கணக்கு வாத்தியார்...

இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க !!!

No comments:

Post a Comment