அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 17, 2017

கத்தோலித்திற்குள்ளே இருந்து கத்தோலிக்கத்தை அழிக்க நினைக்கும் போலிக் கத்தோலிக்கர்களிடம்…கத்தோலிக்கரே உஷாராக இருங்கள் :

கத்தோலித்திற்குள்ளே இருந்து கத்தோலிக்கத்தை அழிக்க நினைக்கும் போலிக் கத்தோலிக்கர்களிடம்…கத்தோலிக்கரே உஷாராக இருங்கள் :

அன்பான கத்தோலிக்க மக்களே ! நாம் இப்போது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய நேரம்…இது.கத்தோலிக்கத்திற்குள் கத்தோலிக்க எதிரிகள் புகுந்து விட்டார்கள் அல்லது கத்தோலிக்கர் என்ற போர்வையில் கத்தோலிக்க எதிரிகளாக மாறிவிட்டார்கள்..
அவர்களை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது…. ரொம்ப சுலபம்…
நம் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் போலிக்
கத்தோலிக்கர்கள்..

உதாரனமாக… மோட்சம், உத்தரிக்கும் ஸ்தலம், நரகம் இது பற்றி தவறாக போதிப்பது…

உதாரணம்..
1. நரகம் இல்லை என்பார்கள்
2. நரகத்தில் இருந்தும் கடவுள் ஆன்மாக்களை காப்பாற்றுவார் என்பர்

3. அருள் நிறை மந்திரத்தை மாற்றி “அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க" என்று அப்பாவி கத்தோலிக்கனை சொல்ல வைப்பார்கள்…. தாங்களும் தப்பரையில் விழுவார்கள்…மற்றவர்களையும்.. விழ வைப்பார்கள்…

4. “ஆன்மா",  “கனி (திருவயிற்றின் கனி)",  "கன்னி",  மோட்சம்”,  “நரகம்”, “விசுவாசம்”  என்ற வார்த்தைகளை நீக்குவார்கள்.. அதைப்பற்றி அவ்வளவு அலட்டிக்கொள்ள மாட்டார்கள்…

5. மூவொரு கடவுள் செய்த புதுமைகளுக்கும், ஆண்டவர் இயேசு செய்த புதுமைகளுக்கும் புது விளக்கம் கொடுத்து புதுமை செய்யவில்லை என்று பொய்யை நா கூசாமல் பேசுவார்கள்…கை கூசாமல் விளக்கவுரை என்ற பெயரில் எழுதி கத்தோலிக்கரின் விசுவாசத்தை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்வார்கள்…

6. தூய தமிழ் என்ற போர்வையில் நல்ல தமிழை தப்பரைகள் போதிக்கப்படவேண்டும் என்பதற்காக மாற்றிக் கொள்வார்கள்..
இது போன்ற தப்பரைப் போதனைகளில்..அவர்களை அடையாளம் காணலாம்…

இதில் மூன்றாம் தப்பரைக்கு வருவோம்..
உலகம் எல்லாம் நம் தூய அன்னையின் ஜெபமாலையில் “அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்று வாழ்த்துகிறது…   ஆனால் தமிழக கத்தோலிக்க திருச்சபையில் சில மேய்ப்பர்கள் மட்டும்  “அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க" என்று ஒவ்வொரு இடமாக சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார்கள்…

போப் ஆண்டவர் முதல் நம் பக்கத்து மாநிலங்கள் வரை அனைவரும் ஒரே மாதிரி அன்னையை “ அருள் நிறைந்தவளே வாழ்க!"  என்று வாழ்த்த, இவர்கள் மட்டும் மாற்ற சொல்லி கேட்பது ஏன் என்பதும் அவர்கள் யார் என்பதும் இன்னுமா நம் மக்களுக்கு புரியல்லை..

கீழ்படிதல் என்றால் அகில உலக கத்தோலிக்க திருச்சபைக்கு கீழ்படிவதா அல்லது தமிழக மேய்ப்பர்கள் சிலருக்கு கீழ்படிவதா..???
அன்னையை இப்படி தப்பரையைக் கொண்டு வாழ்த்தினால் வாழ்த்துபவர்களுக்கு கிடைப்பது சாபமே..… ஆசீர்வாதத்திற்கு பதில் சாபமே வந்து சேரும்… இது தொடர்ந்தால் தமிழ் நாட்டுக்குத்தான் ஆபத்து… அப்படி சொல்லும் குடும்பங்களுக்குத்தான் ஆபத்து.. சாபம்..
சாபங்கள் வேண்டுமா?? ஆசீர்வாதங்கள் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

 சாத்தானை அழிக்கும் கேடயமான “அருள் நிறைந்த" மந்திரத்திற்குள் தப்பறை என்ற ஓட்டையைப் போட்டு அருள் நிறை மந்திரத்தை பலவீனப்படுத்துவதில் திருச்சபை எதிரிகள் ஆர்வமாக உள்ளார்கள்.
கத்தோலிக்கர்களே நாம் விழிப்பாகவும்…எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனென்றால் இந்த கத்தோலிக்க போலிகள்.எங்கே இருக்கிறார்கள்.. அவர்கள் யார் என்பதை அவர்கள் பேச்சை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும்…முகத்தை பார்த்து கண்டுபிடிக்க முடியாது…
அனைவரையும் குறிப்பிடவில்லை…தன்னை கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொண்டு கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக போதிப்பவர்கள் எழுதுபவர்கள் தூண்டுபவர்கள் இவர்களை மட்டுமே கத்தோலிக்க போலிகள் என்று  குறிப்பிடுகிறேன்..…

கத்தோலிக்க விசுவாசிகளே…. உங்கள் விசுவாசத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்… நன்றாக தெரிந்திருந்தும் அது தப்பறைதான் என்று தெரிந்தும் மேய்ப்பர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தப்பாக நினைத்துக்கொண்டு சில நல்ல கத்தோலிக்கர்கள் கூட தப்பறைக்கு பலியாகி விடுவது வேதனையிலும் வேதனை…

சத்திய வேதம் நம் கத்தோலிக்க வேதம்.. நம் கத்தோலிக்க தாய் திருச்சபை எதையும் ஆராய்ந்து அறியாமல் விசுவாச பிரகடனம் செய்யாது… கத்தோலிக்க திருச்சபை அறிவித்த ஒன்றை எடுக்கவோ மாற்றி அறிவிக்கவோ அந்த திருச்சபையில் இருக்கும் யாருக்கும் ஏன் வானதூருக்கு கூட அதிகாரம் கிடையாது என்று திருச்சபையின் தூண்களில் ஒருவரான புனித சின்னப்பரே சொல்லி விட்டார்…
“ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!” – கலாத்தியர் 1:8

மாதாவின் அமலோற்பவத்திற்கு எதிரான தப்பறையே “அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க"
ஆதியாகமம் 3:15 க்கும், லூக்காஸ் 1:28 க்கும், இசையாஸ் 7:14 க்கும் எதிரான வார்த்தை (பொது மொழிபெயற்பில் தேடாதீர்கள்; கத்தோலிக்க பைபிளில் தேடுங்கள்)
கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுக்கும், கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விக்கும் எதிரானது…

Catechism of the Catholic Church - கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ( CCC):

1. CCC Para 490 : The Angel Gabriel, at the moment of the Annunciation, salutes Her as “ FULL OF GRACE"  (Luke 1:28)

2. CCC Para 2676,497 : ….. Mary is full of grace because the Lord is with Her.

3. CCC Para 497 : The Church sees here the fulfillment of the divine promise given through the Prophet Isiah : “Behold, a Virgin shall conceive and bear a son" (Isiah 7 :14)
கடவுளுடைய வார்த்தையையே மாற்றியவர்கள், சின்ன குறிப்பிடத்தை மாற்றியவர்களுக்கு கத்தோலிக்க மறைக்கல்வியை மாற்ற எவ்வளவு நேரம் பிடிக்கும்…

தெரியாமல் கூட தவறுகள் நடக்கலாம்… ஆனால் தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர அதுதான் சரி… நாங்கள் செய்தது தான் சரி என்று மேலும் மேலும் சப்பைக்கட்டு கட்டுவதும் அதையே திரித்து உண்மையாக்க முயற்சிப்பதும் மூவொரு ஆண்டவருக்கு செய்யும் துரோகம்….
பெரியவர்களிடம் பேச முடியாது… ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் அங்கமாக இருக்கும் சாதாரன கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் பேசலாம்…அதுதான் இந்த கட்டுறையின் நோக்கம்… யார் விசுவாசத்தை இழந்தாலும் நாம் இழக்கக்கூடாது….
“இறுதி வரை நிலைத்து நிற்போர் பேறுபெற்றோர்" – ஆண்டவர் இயேசு சுவாமி…
நாம் யார் பக்கம்… நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்….
"அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க" என்ற தப்பறையை அமலாக்கி வருவோர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?

1. “அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்பது தமிழ் வார்த்தையா?  இல்லையா? அதை மாற்ற என்ன அவசியம் ?

2. உலகமே அன்னையை “அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்று வாழ்த்த தமிழக திருச்சபை மட்டும் மாற்றி சொல்ல என்ன காரணம்? யார் காரணம்?

3. கொடுக்கிற அருளில் கடவுளும், பெருகின்ற அருளில் மாதாவும் மட்டுமே அருள் நிறைந்தவர்கள். இப்படி இருக்க அப்போஸ்தலர் பணி 6:8-ல் புனித ஸ்தோவானை ( முடியப்பரை) அருள் நிறைந்தவர் என்று திருவிவிலிய பொது மொழிபெயற்பில் எழுதிவிட்டு மாதாவை மட்டும் அவர்கள் நிலையில் இருந்து இறக்க துடிப்பது ஏன்???

5. உலகப் பொதுவான ஜெபத்தை உலகம் முழுக்க அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக அன்னையை "அருள் நிறைந்த மரியே வாழ்க!" என்று வாழ்த்த தமிழில் மட்டும் ஜெபத்தின் பொருளை மாற்றி வார்த்தை மாற்றம் செய்தது ஏன்??

4. ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க திருச்சபையும் ஒரே மாதிரியாக இருக்க தமிழக கத்தோலிக்க திருச்சபை மட்டும் அதிலிருந்து விலகி செயல்பட என்ன காரணம்????

தமிழக திருச்சபை  தாய் திருச்சபையை விட்டு பிரிந்து விட்டதா?


ஏற்கனவே இருக்கும் ஞானம் நம் பரிசுத்த கடவுள். கடவுளால் சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம் நம் தேவ அன்னை… கடவுள் நினைத்தால் யாருக்கும் அருளை நிறைவாக அளிக்க முடியும்.. அதில் நம் பரிசுத்த அன்னைக்கு மட்டுமே அருளை கடவுள் முழுமையாக வழங்கினார்…
அதனால்தான் கடவுள் கபரியேல் தூதரிடம் நீ சென்று நாசரேத் கன்னிகையை பார்த்து , “ அருள் நிறைந்தவளே வாழ்க ! “ என்று வாழ்த்தவேண்டும் என்று சொன்னார்…
பைபிள் முழுவதும் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை கடவுள் யாரையும் பெயர் சொல்லி அழைப்பாரே தவிர பட்ட பெயர் சொல்லி அழைத்ததில்லை…
மாதா மட்டுமே பெயர் சொல்லாமல் பட்ட பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்… ஏன் அவர் அகில உலகையும் படைத்த சர்வேசுவரனுக்கே தாயாகும் பேறு பெற்றவர்…அதனால்..
யாரோ…எதையோ…செய்வதாக  நினைத்துக்கொண்டு… உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக சொல்லும் ஒரு யூனிவர்சல் ஜெபத்தை தங்கள் இஷ்ட்டத்துக்கு மாற்ற முடியாது…
அன்னை அருள் நிறைந்தவர்கள்… அவரை அருள் மிகப்பெற்றவள் என்று சொன்னால் அது தப்பறை… தப்பறை ஒரு சாவான பாவம்…


குறிப்பு : பங்கில் அன்பியங்கள், பங்குப்பேரவையில் அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் புனித செபஸ்தியார் போல் இருக்க வேண்டும்..செயல் பட வேண்டும்.. நல்ல கத்தோலிக்கர்கள் வேத கலாபனைக்கு தயாராக வேண்டும்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

No comments:

Post a Comment