மகிழ்வான நூற்றாண்டு
பாத்திமாவில் காட்சியளித்த எங்கள் அம்மா
மூன்று சிறாரை தேடியே வந்த தேவனின் அம்மா
அவர்கள் பிரமிக்க ஓவியமாய் நின்றீர் அம்மா
திகைத்த மூவருக்கும் நல்லொளியான எம் அம்மா
வெண்ணாடையில் பேரெழிலாய் வந்தீர் அம்மா
கண்கொண்டு பார்க்க பார்க்க அழகுற நின்றீர் அம்மா
வானில் இருந்து இறங்கி வந்து ஆசீரளித்த எம் அம்மா
சிறாரை மீண்டும் மீண்டும் சந்தித்து மகிழ்வித்த அம்மா
பாவிகள் மனந்திரும்ப பாதை காட்டிய அம்மா
அற்புதமாய்,அதிசயமாய் காட்சியளித்த அம்மா
செபமாலை சிறப்பை வாழ்வாக்க வழியான அம்மா
நூற்றாண்டில் உமைப் புகழ எமைக் காத்த அம்மா
இன்னும் இன்னும் உம்மை வாழ்த்த அருந்தமிழ் தந்திடம்மா........
தினமும் செபமாலை செபிக்க நல்மனம் தாருமம்மா......

No comments:
Post a Comment