அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

தேவை சகிப்பு....

தேவை சகிப்பு....

களம் பல கண்டாலும், சரித்திரமாய்
சாதித்தாலும் தேவை சகிப்பு

தோல்விகளால் துவண்டாலும்,நகைப்போர்
துள்ளி குதித்தாலும் தேவை சகிப்பு

இயேசு கிறிஸ்துவும் அன்னை மரியாளும்
நமக்கு கற்பித்தது தேவை சகிப்பு

புது மனமாய் புது உறவாய் புதுப்பிக்க
என்றென்றும் தேவை சகிப்பு

உப்பு சப்பற்ற பிரச்னையோ,மனம் நொந்த தருணமோ தேவை சகிப்பு

பாடுகள் பட்டு வாழ்வில் வென்ற புனிதர் ஒருமித்து சொல்வது தேவை சகிப்பு

கலக்கமோ நடுக்கமோ எது வந்திடினும்
கடவுள் துணையோடு தேவை சகிப்பு

நியாயங்கள் நிர்மூலமானாலும்,அநியாயங்கள் ஆட்கொண்டாலும் தேவை சகிப்பு

சத்தியங்கள் நீர்த்து போனாலும், சந்திக்கும் யாவும் ஏமாற்றினாலும் தேவை சகிப்பு

கூடா நட்பு ஏமாற்றினாலும்,கூடிய நட்பு பகைத்தாலும் தேவை சகிப்பு

தனக்குரியதெல்லாம் கைவிட்டாலும்,
தனக்குள்ளது கைநழுவி போனாலும் தேவை சகிப்பு

இல்லங்களில் இனியவை குறைந்தாலும், அல்லவை நிலை கொண்டாலும் தேவை சகிப்பு

இயேசுவைப் போல் சகிப்போம்.

இயேசுவில் என்றும் வாழ்வோம்

No comments:

Post a Comment