நல்ல பங்கு
உண்மையாகவே நம்முள்
உறையும் இறைவன் குரல் கேட்பது
மௌனத்திலும் தியானத்திலும்
அமைதி வழி காண்பது
தனிமையிலும் குடும்பத்திலும் செப உணர்வோடு இருப்பது
பரபரப்பிலும் பணியகத்திலும் இறை வார்த்தையை சிந்திப்பது
அயலாரிலும் இயலாரிலும் அக்கறையுடன் செவி சாய்ப்பது
மூத்தோரிடமும் இளையோரிடமும் தாழ்ந்து பதிலளிப்பது
வயோதிகரிடமும்
வறியோரிடமும் வருத்தந்தனை குறைக்க முயல்வது
சஞ்சலப்பட்டோரையும்
சறுக்கியவரையும்
சாதனையாளராக்க போதிப்பது
அகமகிழ்விழந்தோரையும்
அன்பிழந்தோரையும்
அண்டிச் சென்று சந்திப்பது
துறவறத்தாருக்கும்
துயருவோருக்கும் நம்மாலான உதவிக்கரம் நீட்டுவது
நலங்குன்றியோரிடமும்
நலிந்தோரிடமும்
நல்ல பரிவு கொள்வது
இன்னும் என்னென்னவோ.....
நல்லாயனே இறைவா
ஒவ்வொரு செயலிலும்
ஒவ்வொரு கணத்திலும்
ஒவ்வொரு நாளிலும்
ஒவ்வொரு காலத்திலும்
நல்ல பங்கை தேர்ந்தெடுக்க தூய ஆவியின் துணை தாரும் இறைவா....

No comments:
Post a Comment