முன் தயாரிப்பு தேவை.....
திருப்பலியின் துவக்கத்தில்
பிதா சுதன் தூய ஆவி முன் உறவாட
சொல் செயல் கடமையில் தவறியதாலும்
செய்த பாவங்களை அறிக்கையிட
ஆண்டவரும் கிறிஸ்துவுமான இறைவனின் நித்திய மேலான இரக்கம் பெற
வாசகங்களில் ஒன்றித்து மகிழ்வுடன் இறை பிரசன்னத்தை உணர்ந்திட
விவிலிய வசனம் மனதில் பதிந்து வாழ்வில் அறுபது நூறாக பலன் தர
சொல்லப்படும் மறையுரை முழுவதும்
நாளெல்லாம் மனதில் தங்கிட
கத்தோலிக்க ஆணி வேராம் விசுவாசப் பிரமாணம் உள்ளமெங்கும் உரமேற்றிட
காணிக்கை பெறும் தந்தையுடன் இணைந்து நம் மனங்களையும் ஒப்புக்கொடுத்திட
மெய்யாகவே பலியான இறைவனை தாள் பணிந்து ஆராதித்திட
மரித்து உயிர்த்து மீண்டும் வர இருக்கும் ஆண்டவரை நம்பிக்கையோடு போற்றிட
கடவுள் கற்பித்த ஒரே ஒரு பாக்யமான செபத்தை மனதுருக பகர்ந்திட
உன்னதத்தில் வீற்றிருக்கும் இறைவனை மனதார ஓசன்னா பாடி வரவேற்றிட
நம்முள் உறைய வரும் நற்கருணை நாதரின் சமாதானம் நம் பகைவரின் அகத்தில் மிளிர்ந்திட
வானமும் வையமும் படைத்த ஈடு இணையற்ற தேவனை பாவியான உள்ளத்தில் அமர்த்திட
உறவாட உரையாட நாவில் வந்த இறைமைந்தன் குரலைக் கேட்டு பயணம் தொடர்ந்திட
பெற்ற பேரின்ப விளக்கை அணையாமல் இல்லத்திலும் உள்ளத்திலும் கொண்டாடிட
முன் தயாரிப்பு தேவை !
தயாரிப்போடு திருப்பலியில் பங்கேற்போம் ! !

No comments:
Post a Comment