அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

காலை செபம்

காலை செபம்

  இறைவா! இப்புதிய நாளைக் கொடுத்த உமது கருணைக்கு நன்றி கூறுகின்றோம். இன்று எங்கள் செபம்,வேலை, இன்பம், துன்பம் அனைத்தும் உலகில் நிறைவேறும் இறைமகன் இயேசுவின் திருப்பலியோடும் , தாய் மரியாளின் திருஇருதயத்தின் கருத்துகள் நிறைறேவும், எங்கள் பாவங்களின் பரிகாரமாகவும், குறிப்பாக எங்கள் திருதந்தையின் செபகருத்துகள் நிறைவேற்றவும் உமக்கு ஒப்புக்கொடுகின்றோம். எங்கள் திருதந்தை, ஆயர்கள், எங்கள் குருவானவர்கள் அருட்கோதரிகள் அனைவரையும் உமது ஞான ஆவியினால் வழிநடத்தும்.
நல்லாயனே இறைவா! இன்று நடக்கும் எதையும் குறை சொல்லாது பாராட்டவும்; நல்லவர்களின் நற்செய்கைகளை நன்றி சொல்லி வாழ்த்தவும், சோர்வுற்றிருப்பவர்களுக்கு மனத்திடன் அளிக்கவும். கவலையாய் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரவும் செய்தருளும்.வெறுப்பாய் இருப்பவர்களை மகிழ்வூட்டும். உம்மை நம்பி உள்ள இந்த குழுவில் உள்ள அனைத்து நண்பர்களின் குடும்பங்களை ஆசீர்வதியும்.

ஆமேன்

No comments:

Post a Comment