அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

மூவொரு இறைவா போற்றி! போற்றி!

மூவொரு இறைவா போற்றி! போற்றி!

உமக்கே எல்லா புகழ்ச்சியும் மகிமையும் மாட்சிமையும் நன்றியும் உண்டாக கடவது. எங்களுக்கு இன்றைய விடியலை கொடுத்ததற்காக நன்றி தகப்பனே!!!
அப்பா பிதாவே!! எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை நிரப்பும். எங்களை சாத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்து வழி நடத்தியருளும். பாவம் என்று உணரும் உள்ளன்போடு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு திருந்திடும் நல்ல மனதினை கொடுத்தருளும். நீர் எங்களது குறைகளை பாராது அரவனைப்பது போன்றே நாங்களும் எங்களது சகோதரர்களின் குற்றங்குறைகளை பெரிதுப்படுத்தாமல் மன்னிக்கும் மன திடத்தினை கொடுத்தருளும் இறைவா!! நாங்கள் உம்மை தேர்ந்து கொள்ளவில்லை, நீரே எங்களை கருவிலேயே தேர்ந்து கொண்டீர். எனவே, உமது விருப்பம் போல நங்கள் உமக்கு சாட்சிப் பகரவும், உமது நற்செய்தியை எங்களின் ஒவ்வோரு செயல்களின் மூலம் அறிவிக்கும் பாக்கியத்தை கொடுத்தருளும். நங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக வாழ எங்களை ஆசிர்வதியும்.
இறைவா எங்கள் தேவைகளை அறிந்தவர் நீரே! குடும்பங்களில் சாமாதானமும் அன்பும் பெருகவும், வேலையில் நிம்மதி, திருப்தி காணவும், அதன் முலம் கடன் தொல்லை திரவும், நோய் நொடியற்ற வாழ்வு அமைந்திடவும் வரம் தாரும். எங்கள் பயணத்தை நீரே பாதுகாப்புடன் வழி நடத்தும்.
எங்கள் நல்ல தகப்பனே! இன்றைய தினம் இந்த செபமாலை குழு மூலம் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் செபமாலை புகழ்ச்சியை ஏற்று எங்களது எல்லா சிறப்பு கருத்துகளையும் நிறைவேற்றிடவும் குழு நண்பர்கள்  ஒவ்வொருவரையும் குடும்ப உறுப்பினர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுமாயும் உமது ஞானத்தை சாலமோன் ராஜாவிற்கு பொழிந்தது போன்று எங்களுக்கும் பொழிந்திட வேண்டுமாயும் எங்கள் ஆண்டவரும் உமது திருமகனுமாகிய இயேசுநாதர்  வழியாக கெஞ்சி மன்றாடுகிறோம்.

ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment