அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

CONSECRATION TO MARY

CONSECRATION TO MARY

O Mary, Virgin most powerful and Mother of mercy, Queen of Heaven and Refuge of sinners, we consecrate ourselves to thine Immaculate Heart.

அர்ச்சிஷ்ட மரியாயே, மகா சக்தியுள்ள கன்னிகையே, இரக்கத்தின் அன்னையே, விண்ணக அரசியே, பாவிகளுக்கு அடைக்கலமே உம்முடைய மாசற்ற திரு இருதயத்திற்கு எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம்.

We consecrate to thee our very being and our whole life; all that we have, all that we love, all  that we are. To thee we give our bodies, our hearts and our souls; to thee we give our homes,  our families, our country.

எங்கள் வாழ்வையும், நாங்கள் நேசிக்கும் அனைத்தையும், எங்கள் உடல்,பொருள்,ஆன்மா அனைத்தையும் எங்கள் வீட்டையும், நாட்டையும் எங்கள் குடும்பங்களையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

We desire that all that is in us and around us may belong to thee,  and may share in the benefits of thy motherly benediction. And that this act of consecration  may be truly efficacious and lasting, we renew this day at thy feet the promises of our Baptism and our first Holy Communion.

எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உமக்கு உகந்ததாக்கவும், உமது உன்னதமான தாயன்பில் அவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.  இந்த உடன்படிக்கை நீடித்திருக்க எங்கள் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் போது செய்துகொண்ட உறுதி மொழிகளை நாங்கள் இன்று நினைத்து புதுப்பித்துக் கொள்கிறோம்.

We pledge ourselves to profess courageously and at all times  the truths of our holy Faith, and to live as befits Catholics who are duly submissive to all the  directions of the Pope and the Bishops in communion with him.


எங்கள் திருத்தந்தை மற்றும் பேராயர்களின் சீறிய வழி நடத்துதலின் படி உண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழவும்,எங்களது பரிசுத்தமான விசுவாசத்தை உண்மையாகவும் தைரியமாகவும் எப்பொழுதும் அறிக்கையிடவும் உறுதி கூறுகிறோம்.

We pledge ourselves to keep  the commandments of God and His Church, in particular to keep holy the Lord's Day.

கடவுளின் கட்டளைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் குறிப்பாக கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாக அனுசரிக்கவும் உறுதி கூறுகிறோம்.

We  likewise pledge ourselves to make the consoling practices of the Christian religion, and above all, Holy Communion, an integral part of our lives, in so far as we shall be able so to do.

கத்தோலிக்க மதக் கோட்பாடுகளின் படி மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் , எங்கள் வாழ்வில் அங்கமாக கலந்துவிட்ட பரிசுத்த திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்தவும் உறுதி கூறுகிறோம்.

Finally, we promise thee, O glorious Mother of God and loving Mother of men, to devote  ourselves whole-heartedly to the service of thy blessed cult, in order to hasten and assure,  through the sovereignty of thine Immaculate Heart, the coming of the kingdom of the Sacred  Heart of thine adorable Son, in our own hearts and in those of all men, in our country and in all  the world, as in heaven. so on earth.
Amen.

ஓ மகிமை நிறைந்த அன்னையே, மாந்தர்களின் அன்னையே , உம்முடைய இறைவன் திட்டங்களில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், உம் மாசில்லா திரு இருதயத்தின் உன்னதமான அன்பை சுவீகரித்துக் கொள்ளவும்,  எங்கள் இதயங்களிலும் எங்கள் நாடு மற்றும் உலக மாந்தர் அனைவரின் இதயங்களிலும் உமது திருமகனின் திரு இருதயத்தின் அரசை விண்ணக வாசிகள் ஏற்றுக் கொண்டது போல் மன்னகத்தில் நாங்களும் ஏற்று வாழவும் உறுதி கூறுகிறோம்.

ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment