203 மணி ஜெபமாலை கருத்துக்கள் :
ஜெபமாலை கருத்துக்கள் :
1. தமத்திருத்துவத்திற்க்கு மகிமையாகவும், இயேசுவின் திருஇருதய பக்தியும், மாதாவின்
மாசற்ற இருதயத்தின் பக்தியும், அனைத்து குடும்பங்களிலும் மற்றும்
உலகமெங்கும் பரவவும்,
2. இனை
மீட்பரான மாமரியின் மாசற்ற இருதயத்தின் வெற்றிக்காகவும், பரிசுத்த
கன்னிகையின் கருத்துக்களுக்காகவும்,
3. பரிசுத்த
பாப்பரசர் உலக ஆயர்களோடு சேர்ந்து ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு
ஒப்புக்கொடுக்கவும்,
4. பாரம்பரிய
பக்த சபைகளும், கத்தோலிக்க பாரம்பரிய பக்தியும்
காப்பாற்றப்படவும், பாவிகள் மனம் திரும்பவும், கத்தொலிக்கத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும்
கத்தொலிக்கத்திற்கு வர, சாத்தானின் திட்டங்கள்- தப்பரைகள், தந்திர
சோதனைகள் தவிடு பொடியாக, இறையாட்சி மண்ணில் மலரவும், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நம் மூவொரு தெய்வத்தை
ஏற்றுக்கொள்ளும்படியாகவும், கடவுளை விட்டு விலகியுள்ள ஊதாரி
பிள்ளைகளுக்காகவும்,
5. பரிசுத்த
போப் ஆண்டவர் இந்த ஆண்டை ஜெபமாலை ஆண்டாக அறிவிக்கவும், குடும்ப
ஜெபமாலையை ஊக்குவிக்க வரம் வேண்டியும், போப் ஆண்டவரின்
சுகிர்த கருத்துக்களுக்காகவும்,
6. இருபால்
துறவிகளுக்காகவும், பங்குத் தந்தையர்களுக்காகவும், திருவருட்சாதனங்கள் அளித்த அனைத்து குருக்களுக்காகவும் அவர்களின்
ஆன்ம சரிர நலனுக்காகவும், ஆயர்களுக்காகவும் அவர்களின் சிறப்பு
கருத்துக்களுக்காகவும், தேவ அழைத்தல் பெருகவும், (நமது குடும்பத்தில் யாராவது துறவரத்தில் ஈடுபட்டு இருந்தால் அவர்களையும்
நினைவு கூறவும்)
7. உத்தரிக்கும்
ஆன்மாக்கள் இறைவனின் சாமாதானத்தில் நித்திய இளைப்பாற்றி அடையவும், (நமது குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைவு கூறவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும்)
8. திவ்ய நற்கருணைக்கும் தேவதாய்க்கும்
செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்கும், திருப்பலியில் பண்பாடு, கலாச்சாரம் என்ற
பெயரில் மூவொரு கடவுளுக்கு செய்யப்படுகிற அனைத்து நிந்தை அவமானங்களுக்கும்
மன்னிப்பு வேண்டியும், இயேசு தெய்வத்தின் திருஇருதயத்திற்கு
எதிராக செய்யப்படும் நிந்தைகளுக்கு பரிகாரமாகவும்,
9. பங்கு
ஆலயத்துக்காகவும் பங்கு மக்களுக்காகவும், உலக
மக்களுக்காகவும் அவர்களின் சிறப்பு கருத்துகளுக்காகவும், ஆன்ம
சரிர நலனுக்காகவும்,
10. சிறு
குழந்தைகளும் மாணவர்களும் இளையோரும் இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்களில்
சிக்கிவிடாமல் அவர்களை பாதுகாத்து மறைக்கல்வியில் கவனம் செலுத்தி ஞானத்தில்
வளரவும்,
11. அனைவரும் அன்பியங்கள்
திருச்சபையின் ஆணிவேர், உயிர்நாடி என உணர்ந்து அன்பியங்களில்
கலந்துக் கொண்டு அன்பு பகிர்விலும், விருப்பு
வெறுப்புகளுக்கு இடங்கொடாது அனைவரிடத்திலும் அன்பு பாராட்டவும்,
12. நாட்டு
தலைவர்களும், ஆட்சியாளார்களும், அதிகாரிகளும் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகவும், நேர்மையுடன் செயல்படவும், நாட்டில்
நிலவும் பிரச்சனைகள் நீங்கவும்,
13. உலக சமாதானத்திற்காகவும், தீவிரவாதிகள் மனம் திரும்பவும், இயற்கையை
பாதுகாக்கவும்,
14. நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கி
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வறுமை நீங்கி விவாசாயம் செழித்து ஒங்கவும், உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்து நிறுத்தவும், இயற்கை
சிற்றத்தில் இருந்து பாதுகாக்கவும்,
15. நமது சொந்தங்களுக்காகவும்
நட்புகளுக்காகவும் அவர்களது சிறப்பு கருத்துகளுக்காகவும், ஆன்ம சரிர நலனுக்காகவும்,
16. நோயுற்றவர்களுக்காகவும்
வாயதானவர்களுக்காகவும் அவர்களின் துன்பம் நீங்கவும், கேன்சர்
நோயில் அவதியுறுவோர் நோயில் இருந்து விடுதலையடையவும், ஆதரவற்றோருக்காகவும்
17. நமது
சொந்த குடும்ப சிறப்பு கருத்துக்காகவும், குடும்பகளில்
சமாதானம் நிலவவும், குடும்ப ஜெபமாலை ஒவ்வொரு
குடும்பத்திலும், உலகம் முழுவதும் ஜெபமாலை பக்தி பரவவும்
18. நாம்
பணியாற்றும் நிறுவனத்துக்காகவும், நிறுவன தலைவருக்காகவும் ,
உடன் பணி செய்வோருக்காகவும்,
19. போதைக்கு
அடிமையானவர்கள் அதிலிருந்து விடுதலை பெறவும், உலக
போக்கிலிருந்தும், சிற்றின்பங்களில் இருந்தும், விடுதலை பெறவும்
20. இந்த குழுவில் உள்ள அனைத்து
நண்பர்களின் சிறப்பு கருத்துகளுக்காகவும், பணி
சிறப்புறவும், குடும்ப உறுப்பினர்களின் ஆன்ம சரிர
நலனுக்காகவும்
இந்த 203 மணி ஜெபமாலையை
ஒப்புக்கொடுப்போம்..
சந்தோச தேவ இரகசியங்களில்
இருந்து தியானித்து தொடர்ந்து நான்கு தேவ இரகசியங்களை ஒப்புக்கொடுப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
vazha vazha Mariye
ReplyDeletecan i have this page like PDF
can you sent to my gmail
sackilintan@gmail.com
and 203 மணி விவிலிய ஜெபமாலை well pdf plz
Pray for Rev Sr Jessi who has been suffering with sarcoma cancer... Your prayers maje her speedy recovery
ReplyDelete