அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

ஞாயிறு போற்றுவோம்

ஞாயிறு போற்றுவோம்

வாரம் முழுதும் உழைத்து களைத்து ஓய்ந்து போன மனதில் ஒரு ஆனந்தம்

அடைந்த ஆனந்தம்  வாரமெல்லாம் தங்கிடவே இறைவனை தேடவே நாடுவோம் ஆலயம்

ஞாயிறு அதிகாலை விழித்து இறைவனை நோக்கி குடும்பத்தோடு பயணித்தல் அழகு

நீண்ட நேரம் இறை உறவாட, நம்மை சிந்திக்க,
வேண்டிய வரம் கேட்க ஒன்றிப்பது பேரானந்தம்

சிறப்பு வகுப்பு,ஓயாத படிப்பு,இத்துடன் ஆண்டவரின் மறைக்கல்வி பயில இனிய நாள்

உன்னத திருப்பலியில், உருக்கமாக இறை வேண்டலில் நம்மையே மறக்க உகந்த நாள்

திவ்ய பலி முடிவில் நம் தந்தையை சந்திப்பதும் ஆசீர் பெறுவதும் நலம் நாடுவதும் தனிச்சிறப்பு

அறிந்தவர்,அறியாதவர்,எங்கோ பார்த்தவர்,என கண்ணுறும் உறவை புதுப்பித்தல் மகிழ்ச்சி

உதவி தந்தை,அருட் சகோதரங்கள் சந்திப்பு அவர்களுடன் உரையாடல் மனதுக்கு தெம்பு

காலை உணவு கலகலப்பாக அனைவரும் ஒருசேர உரையாடி மகிழும் சந்தோஷ தருணம்

ஆசையாய் சமைத்த (அ)சைவ உணவை விமர்சித்து விருப்பத்தோடு உண்பது அற்புதம்

பிற்பகலில் அனுபவிக்கும் ஒரு குட்டி தூக்கம் தினமும் கிடைக்காத சங்கதி

மாலையில் தேநீர் அருந்தி பிள்ளைகளோடு, பெற்றோரோடு அமர்வதும் ஒரு உற்சாகம்

இரவில் அனைவரும் ஒன்று கூடி செபித்து இறை நன்றி பகர்வது ஆசீரானது

இவ்வருமையான ஞாயிறை இறைவனுக்கு நன்றியுடன் அர்பணிப்போம்.

No comments:

Post a Comment