அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

நற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்:

நற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்:

உலகத்தின் நித்திய ஒளியும் எங்கள் மீட்பருமாகிய இயேசுநாதரைப் பெற்றெடுத்த புனித கன்னிகையே. அறிவீனமும் அந்தகாரமும் நிறைந்த மனதில் உமது பரிசுத்த மன்றாட்டினால் அறிவிலும் பக்தியிலும் வியப்புக்குரிய வளர்ச்சியை அநேக முறை கொடுத்தருளிய தேவஞானத்தின் தாயே, அடியேன் தேவரீரை என்னை ஆதரிப்பவளாகவும் என் படிப்புக்குப் பாதுகாவலாகவும் தெரிந்துகொள்கிறேன்.

ஓ பேறு பெற்ற ஆண்டவளே, நற்படிப்புகளுக்குப் பாதுகாவலே, உமது மன்றாட்டுகளைக் கேட்டு, தூய திரு ஆவியார் எனக்கு நிரம்ப வெளிச்சத்தையும் பலத்தையும் விவேகத்தையும் தாழ்ச்சியையும் தந்தருள்வாராக. எனக்கு நேர்மையான மனத்தையும், போதுமான புத்தி, ஞாபகம் வல்லமைகளையும் அளித்து முக்கியமாய் நான் அனைத்திலும் தேவ ஞானத்தின் திருவுளப்படி நடப்பதற்கு வேண்டிய மன இருதயக் கீழ்ப்படிதலையும் கொடுத்தருள்வாராக.

என் நல்ல தாயே, ஆங்காரம், தற்பெருமை, வீண் விநோதப்பிரியம், யோசனையற்றதனம், இவைகளினின்று என்னைக் காப்பாற்றும். என் விசுவாசத்தையாவது ஆத்தும சமாதானத்தையாவது குறைக்கக்கூடிய எந்தக் காரியத்தினின்றும் என்னைப் பாதுகாத்தருளும்.

ஓ மரியாயே, நான் உமது பாதுகாவலின் உதவியால் அன்னையும் ஆசிரியையுமாகிய பரிசுத்த திருச்சபையின் போதனைக்கும் நடத்துதலுக்கும் எப்போதும் கீழ்ப்படிந்து சத்திய நெறியிலும் புண்ணிய வழியிலும் தவறாமல் தைரியத்தோடும் விடா முயற்சியோடும் நடந்து கடைசியாய் உமது திருமைந்தனும் எங்கள் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் விண்ணுலக அரசை அடைந்து மூவொரு கடவுளின் வாழ்வில் பேரின்பம் கொள்ளக் கிருபை செய்தருளும்.

ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

No comments:

Post a Comment