அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

ஜெபமாலை நிறைவு செபம்

ஜெபமாலை நிறைவில்:
அதிதூதரான அர்ச்சிஷ்ட்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சிஷ்ட்ட கபிரியேலே,  ரஃப்பேலே,  அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே,  சின்னப்பரே,  அருளப்பரே, யாகப்பரே, சகல புனிதர்களே ! எங்கள் காவல் தூதர்களே ! நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 203 மணி செபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்சிஷ்ட்ட தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம்.

அர்ச்சிஷ்ட்ட பாப்பானவருக்காகவும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்.

ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.

கிருபை தயாபத்து மந்திரம் :
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூக்குரலிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
இதனின்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே -ஆமென்.

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே –ஆமென்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக...

 சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

ஜெபிப்போமாக : சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற சர்வேசுவரா! முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீரிடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே; அந்த திவ்ய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே, இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கும்படியாக கிருபை கூர்ந்தருளும்.
இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும் சுவாமி - ஆமென்.

இயேசு, மரி, சூசை உங்களை நேசிக்கிறோம்....

ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள்
-மூன்று முறை

பிதாப்பிதாவாகிய அர்ச்சிஷ்ட்ட சூசையப்பரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித ராயப்பரே, புனித சின்னப்பரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

புனித சந்தியாகப்பரே, புனித அருளப்பரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

புனித சவேரியாரே, புனித அருளானந்தரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

புனித பிலோமினம்மாளே.. புனித மரிய கொறைற்றியே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

புனித பிரான்சிஸே.. புனித ஜெசிந்தாவே..  எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

புனித அல்போன்சம்மாளே,  புனித அன்னை தெரசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

புனித சுவாமிநாதரே, புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்டே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

புனித பிரான்சிஸ் அசிசியாரே! புனித அந்தோனியாரே ...... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

அருளாளர் தேவசகாயம்பிள்ளையே ...     எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அனைத்து புனிதர்களே.. புனிதைகளே..
எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ....

அனைத்து சம்மனசுக்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்....

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே – ஆமென்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment