அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

 லூர்து மாதா

தேவன்னைலூர்து மாதா





புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும் . உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்

தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால் , எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்
ஆமென்

லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புனித லூர்து மாதாவுக்கு நவநாள்

(உத்தம மனஸ்தாபப்பட்ட பின் புனித லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன் பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும் )

இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக
எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்

எங்கள் லூர்து நாயகியே ! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும்
எங்கள் லூர்து நாயகியே ! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக் குணப்படுத்தியருளும்

வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே ! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புகழ்மாலை

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே, கிருபையாயிரும்

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான அமலோற்பவ மாதாவே

லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே

உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே

மோட்ச பிரதேசத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க , அழகின் அவதாரம் போல தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஆத்துமா சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க , அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த்  தரிசனமான அமலோற்பவ மாதாவே

கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே

தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே ⁠⁠⁠⁠

No comments:

Post a Comment