அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

உத்தரிக்கிற ஸ்தல மன்றாட்டு மாலை.

உத்தரிக்கிற ஸ்தல மன்றாட்டு மாலை.

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் (மற்றதும் )

அர்சிஷ்ட மரியாயே ,
*மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

கன்னியர்களுக்குள்ளே  உத்தம அர்சிஷ்ட கன்னிகையே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். மிக்கேலே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

தூதரும்  அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். ஸ்நாபக அருளப்பரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். இராயப்பரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். சின்னப்பரே,  மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். அருளப்பரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். முடியப்பரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச் லவுரேஞ்சியாரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

வேடசாட்சிகலான சகல அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். கிரகோரியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். அமிர்தநாதரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். அகுஸ்தீனாரே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். எரொணிமுசே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச் . மரிய மதலேனே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். கத்தரீனாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

அர்ச். பார்பரம்மாளே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

ஆண்டவருடைய திருவடியார்கலான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் .

தயாபரராயிருந்து அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி

சகல பொல்லாப்புகளிலே நின்று ,  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது கோபத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது நீதி அகோரத்திலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் வல்லமையிலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கடூர வியாகுலத்திலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

துயரமான அழுகையிலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து  அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திருச்சிளுவையைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஐந்து திருக்காயன்களைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப்  பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேற்றரவு பன்னுகிரவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து   அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம்

மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்

இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்.

எங்கள் சகோதர பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்

பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம்.

பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்.

அவர்கள் துயரைச் சந்தோசமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம்.

அவர்களுடைய ஆசை நிறைவேற தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்.

அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்.

உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்.

சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம்
கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம்.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே
அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே
அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே
அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்.

நரக வாசலில் நின்று அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும் .

சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக  அப்படியே ஆகக்கடவது.

சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

No comments:

Post a Comment