அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

செபமாலை தொடக்க செபம்

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்திற் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.

அசுத்தமாயிருக்கிறதை சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதை செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்ததையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி - ஆமென்.

அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி! நீச மனிதரும் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீருக்குத் துதி வணக்கமாகவும் பரிசுத்த தேவ மாதாவிற்குத் ஸ்தோத்திரமாகவும் 203 மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம்.

இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி - ஆமென்

விசுவாசப்பிரமானம்:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன் - ஆமென்.

மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசு கற்பித்த ஜெபத்தை சொல்வோம்

ஒரு பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே

பிதாவின் பிரியமகளே ! பரிசுத்த தேவமாதாவே ! உமது எல்லையற்ற வல்லமையால் எங்களைப் பாதுகாத்து விசுவாசத்தில் வேரூன்றி இருக்கச் செய்தருளும்.

அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்)

சுதனாகிய சர்வேசுவரனுக்கு தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே உமது எல்லையற்ற ஞானத்தால் எங்களை வழி நடத்தி தேவநம்பிக்கையில் நாங்கள் தளராதிருக்கச் செய்யும்

அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்)

பரிசுத்த ஆவியின் ஆலயமே ! பரிசுத்த தேவமாதாவே ! உமது எல்லையற்ற அன்பினால் எங்களுக்காகவும், அனைத்து மக்களுக்காகவும் பரிந்து பேசி தேவ ஸ்நேகமும், பிறர் ஸ்நேகமும் வளரச்செய்யும்

அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்)                                                                                                                                                                                                                   🌹 பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.-ஆமென். 🌹

🌷 பாத்திமா செபம் 🌷
🍀 ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும்,  நரக நெருப்பிலிருந்து எங்களை காப்பாற்றும்,  சகல ஆன்மாக்களிலும் தேவரீருடை இரக்கம் யார் யாருக்கு அதிக தேவையோ அவர்களை பரலோகத்தில் சேர்த்தருளும்.... 🍀⁠⁠⁠⁠

No comments:

Post a Comment