அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

இயேசுவின் திரு இருதயச் செபமாலை:

இயேசுவின் திரு இருதயச் செபமாலை:

கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.

ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.

பத்து மணிக் கருத்துக்கள்:
1. பிற சமயத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

சிரிய மணி: இயேசுவின் மதுரமான திருஇருதயமே - என் சிநேகமாயிரும்.!

பத்து மணி முடிவில்: மரியாவின் மாசற்ற இருதயமே, என் இரட்சணியமாயிரும்

பெரிய மணி : இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்!

ஐம்பது மணி முடிவில்:
முதல்வர்: இயேசுவின் திரு இதயமே
எல்லாரும் :எங்கள்மேல் இரக்கமாயிரும்.

முதல்வர்: சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே
எல்லாரும் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

முதல்வர்: இயேசுவின் திரு இருதயம்
எல்லாரும்: எங்கும் போற்றப்படுவதாக.

முதல்வர்: திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே
எல்லாரும் :எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திருஇருதயமே ! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும் -

ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment