நாமும் கேட்போம்
சீடர்கள் இறையேசுவிடம் சுகமளிக்கும் வல்லமையை கேட்கவில்லை
அற்புதம் செய்யும் ஆற்றலை கேட்கவில்லை
தண்ணீரில் நடக்கும் தன்னிகரற்ற சக்தியை கேட்கவில்லை
பல்லாயிரம் பேருக்கு பலுகும் அதிசயத்தைக் கேட்கவில்லை
போதிக்கக்கூடிய இணையற்ற மகிமையைக் கேட்கவில்லை
காற்றையும் நீரையும் அடக்கும் ஞானத்தைக் கேட்கவில்லை
அவர்கள் கேட்டது ஒன்றே ஒன்றுதான் " எங்களுக்கு செபிக்க கற்றுத் தாரும்"
ஏனெனில்
சுகமளித்தாலும் செபம்
சுதந்திரமாய் உலவிடினும் செபம்
பேயோட்டினாலும் செபம்
பேசாமலிருந்தாலும் செபம்
வல்ல செயலாற்றினும் செபம்
வழியிழந்தோரை கண்ணுற்றும் செபம்
என்றே அன்பர் இயேசு வாழ்ந்தாரே
அன்பர் இயேசுவிடம் செபிக்கும் வரத்தை நாமும் கேட்போம்
செபத்தின் சக்தியை நாளும் பெறுவோம்

No comments:
Post a Comment