அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

தூய சூசையப்பர் மன்றாட்டு மாலை:

தூய சூசையப்பர் மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்

விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

மூவொரு இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது அரசரின் புகழ்பெற்ற புத்திரனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

முதுபெரும் தந்தையரின் மகிமையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தேவதாயாரின் பர்த்தாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னி மரியாளின் கற்புள்ள காவலனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தேவகுமாரனை வளர்த்த தகப்பனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருக்குடும்பத்தின் தலைமையானவரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம நீதிமானான புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம விரத்தரான புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம விவேகமுடைத்தான புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம தைரியசாலியான புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உத்தம பிரமாணிக்கமுள்ளவரான
புனித சூசையப்பரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொறுமையின் கண்ணாடியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தரித்திரத்தின் அன்பனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தொழிலாளிகளுக்கு மாதிரிகையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இல்லற வாழ்க்கையின் ஆபரணமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னிகைகளின் காவலனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

குடும்பங்களின் ஆதரவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதத் திருச்சபையின் பரிபாலனே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே -3

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

எங்களைத் தயை செய்து மீட்டருளும்

ஆண்டவர் அவரை தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்
அவருடைய உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்

மன்றாடுவோமாக:
இறைவா, நீதிமானாகிய புனித சூசையப்பரைக் கன்னியான தேவதாய்க்கு கணவராகத் தந்தருளினீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்துவை ஒப்படைத்தீர். அந்த புனிதன் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியை தொடர்ந்தாற்ற உமது அருட்கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

5 comments: