அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை:

தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்...
கிறிஸ்துவே இரக்கமாயிரும்...
ஆண்டவரே இரக்கமாயிரும்...
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்

விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா!
எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா!
எங்கள் மேல் இரக்கமாயிரும்!

தூய ஆவியாகிய இறைவா!
எங்கள் மேல் இரக்கமாயிரும்!

தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா!
எங்கள் மேல் இரக்கமாயிரும்!

சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கன்னியரில் உத்தம கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பதுவைப் பதியரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோனியாரே,  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தூய்மையில் லீலி மலரான தூய அந்தோனியாரே,  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தவ வலிமை மிக்க தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

விஷஉணவு அருந்திய தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்களைத் தயை செய்து மீட்டருளும் சுவாமி.

மன்றாடுவோமாக.
தூய அந்தோனியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

No comments:

Post a Comment